[ சனிக்கிழமை, 31 மே 2014, 06:18.44 AM GMT ]
இதனடிப்படையில் முதலில் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் இலங்கை வரவுள்ளார்.
இதன் பின்னர் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்வார் என பேசப்படுகிறது.
பிரதமர் மோடி பயணத்துக்கு முன்பாக இலங்கை செல்கிறார் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்?
பிரதமர் நரேந்திர மோடி இலங்கை செல்வதற்கு முன்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அந்நாட்டுக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி ஓரிரு மாதங்களில் இலங்கை செல்லக் கூடும் என்று டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கு முன்னதாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் அந்நாட்டுக்கு செல்ல இருக்கிறார்.
எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில் இந்திய நாடாளுமன்ற எம்.பிக்கள் குழு இலங்கை சென்றிருந்தது. அப்போது யாழ்ப்பாணம், மட்டக்களப்பு உள்ளிட்ட இடங்களில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களையும் அரசியல் தலைவர்களையும் சுஷ்மா தலைமையிலான குழு சந்தித்தது.
இந்நிலையில் பிரதமர் மோடி விரைவில் இலங்கை செல்லக் கூடும் என்று கூறப்படுகிறது.
அதற்கு முன்னதாக சுஷ்மா ஸ்வராஜ் அங்கு செல்வார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmsyFQVLZhu0.html
இன்றும் எரியும் நினைவுகள்
[ சனிக்கிழமை, 31 மே 2014, 07:38.21 AM GMT ]
1981ம் ஆண்டு 31ம் திகதி தமிழர்களின் அறிவினை அழிக்க சிங்களக் காடையர்களும் இனவெறி பிடித்த அரசியல்வாதிகளும் விஸ்பரூபம் எடுத்த நாள் இது.
ஈழத்தமிழர்களின் பெரும் செல்வமாக விளங்கிய யாழ்ப்பாணப் பொது நூலகம் எரியூட்டிச் சிதைக்கப்பட்டு 33 ஆண்டுகள் இன்றுடன் நிறைவு பெறுகின்றது.
தமிழர்களின் அறிவு களஞ்சியமாகவும் தெற்காசியாவின் மிகப் பெரிய நூலகமாகவும் திகழ்ந்த யாழ் நூலகத்தை இனவெறியர்கள் அழித்தொழித்தனர்.
தமிழகத்தில் இல்லாத அரிய பல நூல்கள் மற்றும் பல நூற்றாண்டுகள் பழமையான ஓலைச்சுவடிகள், 1800களில் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட பல பத்திரிகைகளின் மூலப் பிரதிகள் போன்றவை யாழ்ப்பாண பொது நூலகத்தில் இருந்தன.
97 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களை அறிவுப் பசியைப் போக்க யாழ் பொது நூலக அன்னை தன்வசம் கொண்டிருந்தாள்.
நூலகத்தை அழித்தால், தமிழர்களின் அறிவை அழித்து விடலாம் என்று சிங்கள இனவாதிகள் தப்புக் கணக்குப் போட்டு, இனவாத தீயால் பல ஆயிரம் அரிய தமிழ் பொக்கிஷங்களை சாம்பலாக்கினர்.
யாழ். நூலகத்தில் இருந்த நூல்களை மட்டும் படித்தால் பல்கலைக்கழகத்திற்கு கூட போக வேண்டியதில்லை என சிங்கள மருத்துவர் இன்றைய தினத்தில் நினைவு படுத்தியிருந்தார்.
யாழ் நூலகம் அழிக்கப்பட்டதை எண்ணி தமிழ் சமூகம் மட்டுமல்லாது சிங்கள அறிவார்ந்த சமூகமும் இன்றும் கவலை கொண்டுள்ளது.
இலங்கை இனப்பிரச்சினையில் யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிப்பும் முக்கிய விடயமாகும்.
அதுமட்டுமின்றி, ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் அழியா காயம் ஒன்றை ஏற்படுத்தி, தமிழ்த் தேசியப் போக்குக்கு உரம் ஊட்டியதுடன், விடுதலைப் போராட்டத்தை மேலும் உத்வேகமூட்டியது எனலாம்.
பீனிக்ஸ் பறவையைப் போல யாழ்.நூலகம் மீண்டெழுந்திருந்தாலும், சாம்பலாகிப் போன நூல்களை எவராலும் திரும்பத்தர முடியாதல்லவா?
எது எப்படியிருந்தாலும், யாழ் நூலக எரிப்பானது ஈழத் தமிழர்களின் மனதில் மாத்திரமல்ல ஒட்டுமொத்த உலக தமிழ் சமூகத்தில் ஒரு நீங்கா வடுவாகும்.
http://www.tamilwin.com/show-RUmsyFQVLZhu4.html
Geen opmerkingen:
Een reactie posten