வடக்கில் புலிகள் இல்லை கூட்டமைப்பு
தமிழீழ விடுதலைப் புலிகள் இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரசன்னம் தொடர்பான செய்திகள் உண்மையானவை அல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு கிழக்கில் இராணுவத்தினரை தொடர்ந்தும் நிலைநிறுத்திக் கொள்ளும் நோக்கில் அரசாங்கம் இவ்வாறான வதந்திகளை கிளப்பி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயங்கவில்லை, வேறும் அமைப்புக்கள் ஜனநாயக ரீதியில் வெளிநாடுகளில் இயங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார். புலிகள் இயங்கி வருவதாக அமெரிக்கா குறிப்பிட்ட போதிலும் அது குறித்த சரியான தகவல்கள் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதில் அரசாங்கத்திற்கு நாட்டம் இல்லை என்பது பல்வேறு சந்தர்ப்பங்களில் நிரூபணமாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/68854.html
கிளிநொச்சி வீடுகள் மீது இராணுவத்தினர் திடீர் தேடுதல்
இன்று விடிந்தும் விடியாமலுமாக அதிகாலை வேளையிலேயே கிளிநொச்சி இரத்தினபுரத்தில் உள்ள சில வீடுகளை இலக்கு வைத்து இராணுவத்தினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டார்கள். இதனால் அப்பகுதி பதற்றமாக காணப்பட்டது.
வீடுகளுக்குள் உறங்கிய மக்கள் கதவைத் திறந்தபோது இராணுவத்தினர் காணிகளுக்குள் நின்றனர். வீதிகள் முழுவதும் சுற்றிவளைக்கப்பட்டிருந்தன. ஆட்களை கைது செய்யும் இராணுவ வாகனங்களும் கொண்டுவரப்பட்டிருந்தன.
சுமார் ஒரு மணிநேரம் அந்தப் பகுதி சுற்றிவளைக்கப்பட்டிருந்தது. குறித்த பகுதியில் அதிகாலையிலேயே பதற்றம் தொற்றியது. வீடுகளுக்குள் தேடுதல் செய்யப்பட்டதுடன் குடும்ப விபரங்களையும் இராணுவத்தினர் பதிவு செய்து கொண்டனர்.
கோபி உள்ளிட்ட மூன்றுபேரை சுட்டுக்கொன்றதாக அரசாங்கம் அறிவித்த பின்னர் குறித்த பகுதியில் நடக்கும் இரண்டாவது அதிரடித் தேடுதல் நடவடிக்கை இதுவாகும்.
http://www.jvpnews.com/srilanka/68851.html
Geen opmerkingen:
Een reactie posten