தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 29 mei 2014

திருமலைக்கு வருவாரா பிரதமர் நரேந்திரமோடி?

கௌரிகாந்தனை தூக்கியது கூட்டமைப்பு…

யாழ்.மானிப்பாய் பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் கே.கௌரிகாந்தினைக் கட்சியிலிருந்து நீக்குவதாக தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசா கடிதம் அனுப்பியுள்ளார்.
அதனை,வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் நேற்று வியாழக்கிழமை (29) உறுதிப்படுத்தினார். கட்சியின் கொள்கைகள் கோட்பாடுகளுக்கு எதிராகச் செயற்பட்டார் எனத் தெரிவிக்கப்பட்டே இவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/71149.html

முதலமைச்சர் “CV” கதவடைத்த சர்ச்சையில் கடுப்பான தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்!

முதலமைச்சரின் குறிப்பிட்ட அறிக்கை தொடர்பில் கவனத்தைச் செலுத்தியிருப்பதாகத் தெரிவித்திருக்கும் இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளர், முக்கிய சந்திப்புக்கள் இடம்பெறும் போது நேரில் சென்று செய்திகளைச் சுயமாகச் சேகரிப்பதன் மூலமாகவே முழுமையான தகவல்களையும் பெற்றுக்கொள்ள முடியும் என ஊடகவியலாளர்கள் கருதுகின்றார்கள். இதன் மூலமாகவே மக்களுக்கும் சரியன தகவல்களைக் கொடுக்கக்கூடியதாகவிருக்கும் எனவும் இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:- “ஏனைய மாகாண சபைகளுடன் ஒப்பிடும் போது வடமாகாண சபை வித்தியாசமானது. மத்திய அரசுடன் முரண்படும் ஒரு மாகாண சபையாகவும் வடமாகாண சபையே இருக்கின்றது. தமிழ் மக்களின் அபிலாஷைகளின் வெளிப்பாடாகவே அது பார்க்கப்படுகின்றது. வடமாகாண சபையில் என்ன நடைபெறுகின்றது என்பதை அறிய மக்கள் ஆவலாக இருப்பதும் அதனால்தான். இந்த நிலையில்தான் வடக்கேயுள்ள ஊடகவியலாளர்கள் முதலமைச்சரை நாடி வருகின்றார்கள்.
எனவே, இவற்றைக் கவனத்திற்கொண்டு, முக்கியமான சந்திப்புக்கள், ஆலோசனைக் கூட்டங்கள் இடம்பெறும் சந்தர்ப்பங்களில் வட மாகாண சபை முதலமைச்சர் ஊடகவியலாளர்களை நேரில் சந்திக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றோம். போதிய இடவசதி இல்லை என்பதை மட்டும் இதற்கு ஒரு காரணமாகக் கூறாமல், முதலமைச்சர் தமது முடிவை மறுபரிசீலனை செய்து ஊடகவியலாளர்கள் சுயமாக செய்திகளைச் சேகரிக்க அனுமதிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றோம்.”- எனவும் இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.jvpnews.com/srilanka/71184.html

திருமலைக்கு வருவாரா பிரதமர் நரேந்திரமோடி?

இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திரமோடி விரைவில் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. திருகோணமலை – சம்பூரில் நிர்மாணிக்கப்பட்டு வரும் அனல்மின்னுற்பத்தி நிலையத்தை திறந்து வைப்பதற்காக அவர் இந்த விஜயத்தை மேற்கொள்ளலாம் என்று அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாகவே ஜனாதிபதி மகிந்தராஜபக்ச, சம்பூர் அனல்மின்னுற்பத்தி நிலையத்தின் பணிகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.  இந்த மின்னுற்பத்தி நிலையம் இந்தியாவின் நிதியின் கீழ் நிர்மாணிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
http://www.jvpnews.com/srilanka/71190.html

Geen opmerkingen:

Een reactie posten