தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 30 mei 2014

மோடியின் செயற்பாட்டால் இலங்கை கடற்படையினர் தாக்க மாட்டார்கள்: தமிழக மீனவர்கள் நம்பிக்கை

தமிழரசு கட்சிக்கு எதிராக மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர் வழக்கு
[ வெள்ளிக்கிழமை, 30 மே 2014, 02:06.51 PM GMT ]
இலங்கை தமிழரசு கட்சிக்கு எதிராக மானிப்பாய் பிரதேச சபையின் உறுப்பினர் கே. கௌரிகாந்தன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு மானிப்பாய் பிரதேச சபையில் சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களித்தமைக்காக, அவருக்கு எதிராக ஒழுக்கவினை நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
மேலும் அவரது பிரதேச சபை உறுப்பினர் பதவியையும் நீக்குவதற்காக, தமிழரசு கட்சி தேர்தல்கள் ஆணையாளருக்கு அறிவித்திருக்கிறது.
இவற்றுக்கு எதிராகவே அவர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyFQULZhry.html
மோடியின் செயற்பாட்டால் இலங்கை கடற்படையினர் தாக்க மாட்டார்கள்: தமிழக மீனவர்கள் நம்பிக்கை
[ வெள்ளிக்கிழமை, 30 மே 2014, 02:20.52 PM GMT ]
இலங்கை கடற்படையினர் இனி தங்களை தாக்க மாட்டார்கள் என்று நம்புவதாக தமிழக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 45 நாட்களுக்கு பின்னர் தங்களின் தொழிலை இன்று ஆரம்பிக்கின்றனர். அவர்கள் கடந்த 45 நாட்களாக மீனினப் பெருக்கத்துக்காக மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கவில்லை.
இந்த நிலையில் புதிதாக பதவி ஏற்றுள்ள நரேந்திர மோடியின் நடவடிக்கை காரணமாக, தங்களை இலங்கை கடற்படையினர் தாக்க மாட்டார்கள் என்று நம்புவதாக நம்பிக்கை வெளியிட்டிருக்கின்றனர்.
எனவே தங்களால் பெருந்தொகையான இறால் மீனினங்களை பிடிக்க முடியும் என்று கருதுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyFQULZhrz.html

Geen opmerkingen:

Een reactie posten