தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 31 mei 2014

யாழில் கடந்த ஒரு வாரத்தில் 40 பேர் கைதாம்!

69 வயதாகும் இவரைத் தெரியுமா?

இதற்கு முன்பு தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) தலைவராக இருந்து 2009-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். டிராய் விதிப்படி அங்கிருந்து ஓய்வு பெற்றவர்கள் மத்திய மற்றும் மாநில அரசின் உயர் பொறுப்புகளை வகிக்கக் கூடாது என்ற விதி இவருக்காக மாற்றி அமைக்கப்பட்டது.
உத்திரப்பிரதேச பிரிவை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி இவர். 1967-ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். உத்திரப்பிரதேச முதல்வர்கள் கல்யாண் சிங் மற்றும் முலாயம் சிங் யாதவ் ஆகியோருக்கு முதன்மை செயலாளராக இருந்தவர்.
மேலும் மத்திய அரசிலும் பல முக்கிய பொறுப்புகளை வகித்திருக்கிறார். டெலிகாம், வர்த்தம் மற்றும் உரத்துறை அமைச்சகத்தில் இருந்திருக்கிறார். வாஷிங்டனில் இருக்கும் இந்திய தூதரகத்திலும் சில காலம் பணிபுரிந்தவர்.
உலக வங்கியின் சர்வதேச நிதி மையத்திலும் சில காலம் பணிபுரிந்தவர். அலஹாபாத் பல்கலைக்கழகத்தில் பொதுநிர்வாகமும், வேதியியலும் படித்தவர். ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகப்படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.xmishra

http://www.jvpnews.com/srilanka/71311.html

யாழில் கடந்த ஒரு வாரத்தில் 40 பேர் கைதாம்!

யாழ்ப்பாணத்தில் மீண்டும் தலைவிரித்தாடும் அடிதடி, வாள்வெட்டு, கோஸ்டி மோதல் சம்பவங்களின் தொடர்ச்சியாக இவ்வாறான சம்பவங்களில் ஈடுபட்ட 40 பேர் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.
இவர்களில் ஏறத்தள அரைவாசித் தொகையினராக 40 பேர் வாள்வெட்டு, கோஸ்டி மோதல், அடிதடி போன்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.அதேபோன்று காங்கேசன்துறைப் பிரிவின் கீழ் உள்ள பொலிஸ் நிலைங்களில் ஊடாக 96 பேர் உட்பட மொத்தமாக யாழ்.மாவட்த்தில் 179 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரும் அந்தந்தப் பகுதிகளில் உள்ள நீதிமன்றங்களில் ஆஜர்செய்யப்பட்டு அவர்களுக்கான தண்டனையும பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
http://www.jvpnews.com/srilanka/71329.html

Geen opmerkingen:

Een reactie posten