தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 28 mei 2014

மலேசியாவில் கைதானவர்கள், விடுதலைப் புலிகள் என்று நிரூபிக்குமாறு ராமசாமி, காலித்துக்கு சவால்



யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் ஈ.பி.டி.பி, கூட்டமைப்பு மோதல்.... (சுவாரஸ்யமான வீடியோ)
[ செவ்வாய்க்கிழமை, 27 மே 2014, 10:14.21 PM GMT ]
மகேஸ்வரி நிதியம் தொடர்பான விவாதம் இடம்பெற்ற போது, “ஈ.பி.டி.பி கொள்ளையர்கள் கொள்ளையடித்தனர்” என்று ஈ.பி.ஆர்.எல்.எப் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் பேச முற்பட, ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவானந்தா, ..
அதனை மறுதலித்து “உங்களின் கொள்ளைகள், கடந்தகால வரலாறு குறிப்பாக, மண்டையன்குழு குறித்து கதைக்க வேண்டி ஏற்படும்” என்று குறிப்பிட மிகவும் காரசாரமான விவாதம் ஏற்பட்டது.
http://www.tamilwin.com/show-RUmsyFRbLZjw6.html
மலேசியாவில் கைதானவர்கள், விடுதலைப் புலிகள் என்று நிரூபிக்குமாறு ராமசாமி, காலித்துக்கு சவால்
[ செவ்வாய்க்கிழமை, 27 மே 2014, 11:31.05 PM GMT ]
மலேசியாவில் கைதுசெய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட மூன்று பேரும் விடுதலைப் புலிகள் என்பதற்கான ஆதாரத்தை காண்பிக்குமாறு பினாங் பிரதி முதலமைச்சர் பி ராமசாமி சவால் விடுத்துள்ளார்.
மலேசியாவின் பொலிஸ்மா அதிபர் டான் ஸ்ரீ காலித் அபு பாக்கருக்கு இந்த சவால் விடுக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் செயலிழந்த நிலையில் குறித்த மூவரும் ஐக்கிய நாடுகள் அகதிகள் ஆணையக அட்டைகளை கொண்டிருந்தனர்.
இவர்களுக்கு எதிராக அதிகாரிகள் இதுவரை காலமும் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
இந்தநிலையில் எவ்வாறு விடுதலைப் புலிகள் இயங்குகிறார்கள் என்று காலித் கூற முடியும் என்று ராமசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தவிடயத்தில் மலேசிய பொலிஸார் எவ்வித விசாரணையையும் மேற்கொள்ளாது, இலங்கையில் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த மூவரையும் கைதுசெய்துள்ளதாக ராமசாமி சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே மலேசிய பொலிஸ் மா அதிபரை விவாதத்துக்கு வருமாறு தாம் அழைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடைக்கலம் தேவைப்படும் தமிழர்களை சிறையில் அடைக்க வேண்டாம் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இதேவேளை இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட மூன்று பேரும் கடந்த 15ம் திகதியன்று மலேசியாவில் கைதுசெய்யப்பட்டவர்களாவர் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyFRbLZjw7.html

Geen opmerkingen:

Een reactie posten