தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 28 mei 2014

விக்னேஸ்வரனுக்கு தனியான அழைப்பு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்த பாஜக!- ரைம்ஸ் ஒப் இந்தியா

ஆந்திரா, ஒடிசாவிலுள்ள 85 மீனவர்களை விடுவிக்க இந்தியா இணக்கம்
[ புதன்கிழமை, 28 மே 2014, 03:16.15 AM GMT ]
இந்தியாவின் பல்வேறு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை விடுவிக்க இந்திய அரசாங்கம் இணங்கியுள்ளது.
85 மீனவர்கள் இந்தியாவின் ஆந்திரா மற்றும் ஒடிசா ஆகிய இடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் இவர்களை விடுவிக்கும் செய்தி நேற்று பிரதமர் மோடியை சந்தித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று இந்திய செய்தித்தாள் ஒன்று கூறுகிறது.
ஏற்கனவே இந்தியாவுக்கு செல்லும் முன்னர் இலங்கையில் உள்ள இந்திய மீனவர்களை விடுவிக்கும் உத்தரவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyFRcLZjx7.html
விக்னேஸ்வரனுக்கு தனியான அழைப்பு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்த பாஜக!- ரைம்ஸ் ஒப் இந்தியா
[ புதன்கிழமை, 28 மே 2014, 04:51.41 AM GMT ]
புதுடில்லியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை நடைபெற்ற இந்தியப் பிரதமரின் பதவியேற்பு நிகழ்வுக்கு இலங்கையின் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரனுக்கு தனியான அழைப்பை அனுப்புவதற்கு பாஜக வும் இந்திய வெளிவிவகார அமைச்சும் மறுத்து விட்டது என்று ரைம்ஸ் ஒவ் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வுக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி. விக்கினேஸ்வரனுக்கு தனியான அழைப்பை அனுப்ப வேண்டும் என்று பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளும், அங்கம் வகிக்காத தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளும் வேண்டுகோள் விடுத்திருந்தன.
எனினும், பாஜக வும் இந்திய வெளிவிவகார அமைச்சும் அந்தக் கோரிக்கையை நிராகரித்து விட்டன. வெளிநாட்டு அரசுத் தலைவர்களுக்கு மட்டுமே அழைப்புகள் அனுப்பப்பட்டுள்ளன.
மஹிந்த ராஜபக்ச­வுடன், விக்னேஸ்வரன் வருவதற்கு எந்த எதிர்ப்பும் இல்லை. ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருக்கு தனியான அழைப்பு அனுப்புவது இலங்கையின் பிராந்திய ஒருமைப்பாட்டை மதிக்கும் கடப்பாட்டை இந்தியா மீறுவதாகிவிடும் என்பதாலேயே அவருக்கு அழைப்பு விடுக்க மறுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மோடியின் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்க தன்னுடன் வருமாறு இலங்கை ஜனாதிபதி விடுத்த அழைப்பை வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் நிராகரித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
http://www.tamilwin.com/show-RUmsyFRcLZio2.html

Geen opmerkingen:

Een reactie posten