தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 30 mei 2014

கனடியத் தமிழர்கள் இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடையை கோருவதற்காக ஒட்டாவாவில் கூடி உள்ளனர்.

இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகள் சிறுபான்மையினரை தனிமைப்படுத்தும்!- அமெரிக்கா எச்சரிக்கை -

இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் மேற்கொண்டு வரும் மத்தியமய அபிவிருத்தி மற்றும் அரசியல் நடவடிக்கைகள் காரணமாக இன மற்றும் மதரீதியில் சிறுபான்மையினங்கள் தனிமைப்படுத்தப்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.
இதில் இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு வழங்கப்படும் சமவுரிமைகள் மற்றும் சிவில் உரிமைகள் என்பனவும் உள்ளடங்கும் என்று அமெரிக்க அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
26 வருட காலப்போர் முடிவடைந்து ஐந்து வருடங்கள் கழிந்துள்ள போதிலும் கடந்த காலங்களை விட தற்போது சவால்கள் எதிர்நோக்கப்படுவதாக அமெரிக்க அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
வடக்கு மாகாண தேர்தல் நடைபெற்ற பின்னர் அங்கு சிறியளவிலான நல்லிணக்கம் ஏற்பட்டுள்ளது என்று அமெரிக்க அரசாங்கம் காங்கிரஸ்சுக்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் இலங்கை அரசாங்கத்துடன் ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில் செயற்பட அமெரிக்கா விருப்பம் கொண்டுள்ளது.
இதற்காக யுஎஸ்எய்ட் நிறுவனம் முன்னாள் போர் வலயப்பகுதிகளில் இளைஞர் வலுவூட்டல் மற்றும் பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்கள் மத்தியில் பல வேலைத்;திட்டங்களை முன்னெடுத்து செல்கிறது.
அத்துடன் சுதந்திரமான ஊடகத்துறைக்கான உதவிகளை வழங்கி வருகிறது.
இன்னும் உள்ளுரில் மீள்குடியேற்றப்படாமல் இருக்கும் மக்களுக்கான உதவிகளை வழங்கி வருகிறது.
அதேநேரம் இறுதி சமாதானததுக்காகவும் அமெரிக்கா முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அமெரிக்க அரசாங்கம் தெரிவித்துள்ளது
- See more at: http://www.canadamirror.com/canada/26831.html#sthash.sfPJwTDz.dpuf


கனடியத் தமிழர்கள் இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடையை கோருவதற்காக ஒட்டாவாவில் கூடி உள்ளனர். 
கனடியத் தமிழர் தேசிய அவை இலங்கைக்கு எதிராக கனடிய அரசாங்கத்தின் பிரத்தியேகப் பொருளாதாரத் தடைச் சட்டத்தை பிரயோகிக்குமாறு கோருவதற்காக ஒட்டாவாவில் மே 26 முதல் மே 30 வரை கூடி உள்ளனர். இப்பரப்புரைக்காக பல தமிழர் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளும் மாணவர் சமூகத் தலைவர்களும் கனடாவின் பல பாகங்களிலுமிருந்து வந்து இலங்கையின் போர்க்குற்றம், மானிடத்திற்கு எதிரான குற்றம் மற்றும் இன அழிப்பு ஆகியவற்றைப் புரிந்த இலங்கை அரசிற்கு எதிராக பொருதாரத்தடையைக் கோரி உள்ளனர்.
இப்பரப்புரையில் பல கனடிய அனைத்துக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் பல வெளிநாட்டு தூதுவராலயங்களுடனும் பல காத்திரமான சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏப்ரல் 13-2014 ல் எண்பது தமிழ்க் கனடிய அமைப்புக்கள் ஒன்றுகூடி ஒருமித்த தீர்மானத்தை எடுத்திருந்தனர். இத்தீர்மனத்தின் அடிப்படையில் இலங்கை அரசுக்கெதிரான இலக்கு வைக்கப்பட்ட பொருளாதார தடையும் ஒன்று.
மேலதிக தொடர்புகளுக்கு: கனடியத் தமிழர் தேசிய அவை
தொலைபேசி: 416-830-7703 | மின்னஞ்சல்: info@ncctcanada.ca
முகநூல்: facebook.com/canadianncct
1. Group Picture
2. Meet with MP Stephen Woodworth
3. Meet wth MP Mark Adler
4. Meeting with Liberal MPs
5. Meeting with MP Andrew Cash
6. Meeting with MP Paul Dewar
7. Meet at Philipine Embassy
- See more at: http://www.canadamirror.com/canada/26835.html#sthash.DHHbLuEJ.dpuf

Geen opmerkingen:

Een reactie posten