தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 29 mei 2014

கொள்கை ரீதியான சர்வதேச யுத்தம் அவசியம்!- தயாசிறி ஜயசேகர!

நல்லிணக்கம் குறித்து இலங்கை ஸ்பெயினுக்கு விளக்கியுள்ளது
[ வியாழக்கிழமை, 29 மே 2014, 10:16.01 AM GMT ]
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஸ்பெயின் வெளிவிவகார அமைச்சர் மானுவல் கார்சியா மார்பிலை சந்தித்து இருதரப்பு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.
அல்ஜியர்ஸில் நடைபெற்ற அணிசேரா நாடுகள் அமைப்பின் 17வது வெளிவிவகார அமைச்சர்களின் கூட்டத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இலங்கையின் தற்போதைய நிலைமைகள் குறிப்பாக அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கம் தொடர்பான விவகாரங்கள் குறித்து ஸ்பெயின் வெளிவிவகார அமைச்சரிடம் அமைச்சர் பீரிஸ் விளக்கியதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனை தவிர வர்த்தகம், முதலீடு, சுற்றுலா உட்பட ஏனைய முக்கிய துறைகள் குறித்தும் அமைச்சர்கள் கலந்துரையாடியுள்ளனர்.
ஸ்பெயின் அரசாங்கம் எதிர்காலத்தில் கொழும்பில் அதன் தூதரகம் ஒன்றை திறக்க திட்டமிட்டுள்ளமை குறித்தும் அந்த நாட்டு அமைச்சர், அமைச்சர் பீரிஸிடம் அறிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கு இடையில் பல்வேறு உறவுகளை மேம்படுத்தி வளர்ச்சிகளை முன்னெடுப்பது இதுவே சரியான நேரம் என கருத்துவதாக ஸ்பெயின் வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyFRdLZivy.html
கொள்கை ரீதியான சர்வதேச யுத்தம் அவசியம்!- தயாசிறி ஜயசேகர
[ வியாழக்கிழமை, 29 மே 2014, 10:23.34 AM GMT ]
இராணுவத்தினர் போரில் விடுதலைப் புலிகளை தோற்கடித்த போதும் புலம்பெயர் புலிப் பயங்கரவாதிகள் சர்வதேசத்தில் ஈழம் என்ற கொள்கையை முன்னோக்கி நகர்த்தி வருவதாக வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
இதற்கு எதிராக இலங்கையும் சர்வதேச ரீதியில் கொள்கை ரீதியான போரை தொடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
குருணாகல் பிரதேசத்தில் நடைபெற்ற இராணுவத்தினருக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஐரோப்பா உட்பட வெளிநாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் இலங்கையை பின்நோக்கி நகர்த்தும் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதுடன், ஈழக் கொள்கையை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
http://www.tamilwin.com/show-RUmsyFRdLZiv0.html

Geen opmerkingen:

Een reactie posten