காணி அபகரிப்புக்கு எதிராக கொழும்பில் கையெழுத்துப் போராட்டம்
http://www.jvpnews.com/srilanka/71364.html
மோடி – ஜெயலலிதா சந்திப்பு பலத்த எதிர்பார்ப்பில்
தமிழக முதல்வர் ஜெயலலிதா வரும் ஜூன் மாதம் 3 ஆம் திகதி தில்லி செல்கிறார். அங்கு பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து, தமிழகத்தின் வளர்ச்சி தொடர்பான கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளிக்கிறார்.
முதல்வரின் தில்லி பயணம் குறித்து தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: முதல்வர் ஜெயலலிதா வரும் 3 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) தில்லி செல்கிறார். அங்கு பிரதமர் நரேந்திர மோடியை அவரது சவுத் பிளாக் அலுவலகத்தில் சந்தித்து பேசுகிறார். அப்போது பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை மனு ஒன்றை அளிக்க இருக்கிறார். அந்த மனுவில், மத்திய அரசில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள தமிழகத்தின் தீர்க்கப்படாத முக்கிய பிரச்னைகள் குறித்தும், மாநிலத்தின் வளர்ச்சிக்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் குறிப்பிடப்பட்டிருக்கும் எனத் தெரிகிறது.
தமிழக அரசின் சார்பில் அளிக்கப்டும் கோரிக்கை மனுவில், காவிரி, முல்லைப் பெரியாறு உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் இடம்பெற்றிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காவிரிப் பிரச்னையில் நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பைச் செயல்படுத்துவதற்கான காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பது, முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட தமிழகத்தின் நலன் சார்ந்து மத்திய அரசு செய்ய வேண்டிய முக்கிய அம்சங்கள் கோரிக்கை மனுவில் இடம்பெறக் கூடும் என்று கூறப்படுகிறது.
மேலும், காங்கிரஸ் தலைமையிலான கடந்த மத்திய அரசில் தமிழகத்துக்கு மண்ணெண்ணெய், அரிசி போன்ற அத்தியாவசிய பொருள்களின் அளவு குறைக்கப்பட்டதை இப்போது சுட்டிக்காட்டி போதுமான அளவு வழங்கவும் முதல்வர் ஜெயலலிதா மோடியிடம் வலியுறுத்துவார் என்று தெரிகிறது. மேலும், தமிழகத்தில் உள்ள பிரச்னைகளில் உடனடியாக முன்னுரிமை கொடுத்து கவனம் செலுத்த வேண்டிய அவசியம் பற்றியும் மாநிலத்தின் நியாயமான உரிமைகளுக்கும், விரைவான வளர்ச்சிப் பாதைக்கும் மத்திய அரசு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் மோடியிடம் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்துவார் என்று தெரிகிறது.
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் சம்பவம் அடிக்கடி நிகழ்ந்து வருவதால் மீனவர்கள் நலனை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும்படியும் பிரதமரை அவர் கேட்டுக்கொள்வார் என்று சொல்லப்படுகிறது.
அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அஇஅதிமுக மொத்தம் உள்ள 39 இடங்களில் 37 இடங்களை வென்றது. இதேபோல பா.ஜ.க. அமோக வெற்றிபெற்று மத்தியில் ஆட்சியைப்பிடித்தது. இதையடுத்து முதல்வர் ஜெயலலிதா, தேர்தல் வெற்றிக்காக நரேந்திர மோடிக்கு வாழ்த்துத் தெரிவித்தார். அத்துடன் மோடி தலைமையில் அமைய உள்ள மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே நல்லுறவு ஏற்படும் என்று நம்புவதாகவும் தெரிவித்திருந்தார். பதிலுக்கு நரேந்திர மோடியும், தமிழகத்தில் அதிமுகவின் வெற்றிக்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துத் தெரிவித்திருந்தார்.
பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு, நரேந்திர மோடியை முதல்வர் ஜெயலலிதா சந்திப்பது இதுவே முதல் முறையாகும். முன்னதாக, தமிழகத்தின் முதல்வராக ஜெயலலிதா பதவியேற்ற போது நடந்த விழாவுக்கு மோடியும், குஜராத் முதல்வராக மோடி பதவியேற்றபோது அந்த விழாவில் முதல்வர் ஜெயலலிதாவும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
http://www.jvpnews.com/srilanka/71368.html
Geen opmerkingen:
Een reactie posten