தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 28 mei 2014

வடமாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை வீட்டுக்குள் குவிந்த இராணுவம்

இணையக்குற்றங்கள் தொடர்பில் பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
[ புதன்கிழமை, 28 மே 2014, 12:33.47 AM GMT ]
இணையக்குற்றங்கள் தொடர்பில் விழிப்பாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் வலியுறுத்தியுள்ளனர்.
எனவே இணையத்தள பாவனை மற்றும் குறிப்பாக இ.வங்கி சேவைகளின் போது கவனமாக நடந்து கொள்ளுமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.
இணையத்தள பணமாற்றங்களின் போது மாற்று சிம் அட்டைகளை பயன்படுத்துவது சிறந்தது.
வங்கி ஒன்றின் இணையத்தை பயன்படுத்தும் போது குறித்த வங்கியின் இணைப்புக்கள் என்று வரும் ஏனைய இணைப்புக்களை தவிர்க்குமாறு பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன கோரிக்கை விடுத்துள்ளார்.
கணக்கு இலக்கங்கள் மற்றும் கடன் அட்டைகளின் பாஸ்வேட் போன்றவற்றை கோரி வரும் மின்னஞ்சல்களுக்கு பதிலளிக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுள்ளார்.
அண்மைக் காலத்தில் மாத்திரம், குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு இணையக்குற்றங்களுடன் தொடர்புடைய சமூக வலைத்தளங்கள் தொடர்பில் 235 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyFRcLZjx0.html
வடமாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை வீட்டுக்குள் குவிந்த இராணுவம்
[ புதன்கிழமை, 28 மே 2014, 03:44.50 AM GMT ]
இன்று புதன்கிழமை காலை 4 மணி தொடக்கம் கிளிநொச்சி திருநகரில் வடமாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளையின் வீட்டை சுற்றிவளைத்து நின்ற இராணுவம் அவரையும், அவரது குடும்பத்தினரையும் காலைக் கடமைகளை கூடச் செய்ய முடியாதவாறு இடையூறு செய்துள்ளது.
காலை 8.30 மணிவரை அவர் வீட்டில் நிலை கொண்டிருந்த இராணுவம் வீட்டுக்குள் நுழைந்து குடும்பம் சம்பந்தப்பட்ட ஆவணங்களை பரிசோதித்த பின் சென்றுள்ளனர்.
இவ்வாறுதான் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள  கிராமங்களில் இராணுவம் அதிகாலையில் வீடுகளுக்குள் நுழைகின்றது.
காலை வேளைகளில் தமிழ் இளம் பெண்கள், குடும்ப பெண்கள் தமது இரவு ஆடையுடன் வீட்டில் உறங்கும் வேளைகளில், இராணுவம் அதிகாலைகளில் வீடுகளுக்குள் புகுந்த பரிசோதனை என்ற பேரில் சிரமங்களையும் அசௌகரியங்ளையும் ஏற்படுத்தி வருகின்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyFRcLZioy.html

Geen opmerkingen:

Een reactie posten