தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 29 mei 2014

சார்ஜாவில் மரணமான நபர் தொடர்பில் 4 இலங்கைப் பெண்கள் விசாரணை


சார்ஜாவில் 22வது மாடியில் இருந்து வீழ்ந்து மரணமான இலங்கையர் தொடர்பில் நான்கு இலங்கைப் பெண்கள் விசாரணை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் கடந்த ஏப்ரல் 24 ஆம் திகதி இடம்பெற்றது.
இந்தநிலையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னரே நான்கு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை இந்த சம்பவத்தை நேரில் கண்டதாக கூறப்படும் காவலாளி ஒருவரும் குத்தகை காணி நிறுவன முகாமையாளர் ஒருவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
சிசிடிவி கமெராக்களின் படங்களின்படி இறந்தவரும் ஒரு பெண்ணும் குறித்த மாடித்தொகுதிக்கு வந்தமை கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
2ம் இணைப்பு
சார்ஜாவில் ஆணின் மரணம் தொடர்பில் 4 இலங்கை பெண்களிடம் விசாரணை
சார்ஜாவின் அல் அல் நாடா என்ற பகுதியில் உள்ள தொடர்மாடி குடியிருப்பின் 22 வது மாடியில் இருந்து ஆண் ஒருவர் விழுந்து மரணமான சம்பவம் குறித்து 4 இலங்கை பெண்களிடம் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.
இறந்தவருடன் தொடர்மாடி குடியிருப்பில் இந்த பெண்கள் வசித்து வந்ததாக ஐக்கிய அரபு இராஜ்ஜிய சட்டத்தரணியான சலீம் அல் ஷாபாய் தெரிவித்தார்.
இந்த பெண்கள் அனைவரும் தமது அனுசரணையாளரிடம் இருந்து தப்பியோடிவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஏப்ரல் 24ம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவத்தை பார்த்ததாக கூறப்படும் தொடர்மாடி குடியிருப்பின் பாதுகாவலர் மற்றும் ரியல் எஸ்டேட் முகாமையாளர் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டதுடன் அவர்கள் இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ஒரு பெண் தொடர்மாடி குடியிருப்புக்கு திரும்புவது பாதுகாப்பு கமராவில் பதிவாகியுள்ளதுடன், இறந்தவர் நடைபாதையில் வைத்து அந்த பெண்ணை தாக்குவதும் பதிவாகியுள்ளது.
இறந்தவர் பல்கனியில் இருந்து துதித்துள்ளதாக காட்சியங்கள் கூறியுள்ளதாக சட்டத்தரணி ஷாபாய் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் இந்த சம்பவம் தொடர்பில் வழக்கு நடத்த மருத்துவ பரிசோதனை அறிக்கைக்காக விசாரணையாளர் காத்திருப்பதாக கூறப்படுகிறது.
விசாரணைகள் முடியும் வரை பெண்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் தேவையேற்பட்டால், ஏனைய இரண்டு ஆண்களும் கைது செய்யப்படுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten