[ வியாழக்கிழமை, 29 மே 2014, 07:08.40 AM GMT ]
லண்டனில் நேற்று முன்தினம் பி.பி.சி சிங்கள சேவைக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
1983 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்து ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் ஜே.வி.பியை தடை செய்தன் பின்னர், ஆயுதம் ஏந்தும் வரை சம்பவங்கள் அதிகரித்தன.
ஜே.வி.பியினால் மேற்கொள்ளப்பட்ட கொலை தொடர்பில் எமது சம்பந்தப்பட்ட குடும்பங்களிடம் துக்கத்தையும் கவலையும் தெரிவித்து கொள்கிறது.
1989ம், 90 ஆம் ஆண்டுகளில் கொல்லப்பட்ட ஜே.வி.பியின் உறுப்பினர்கள் தொடர்பில் சர்வதேசம் கூட விசாரணைகளை கேட்கவில்லை. யாரிடம் விசாரணைகளை நடத்துமாறு கோருவது?.
கொலைகளுடன் சம்பந்தப்பட்டவர்களிடம் கொலை செய்தவர்களிடம் விசாரணைகளை கோரும் அளவிற்கு நாம் அறிவீனமுடையவர்கள் அல்ல.
கொலைகளுடன் யார் சம்பந்தப்பட்டுள்ளனர். யார் பொறுப்புக் கூறவேண்டும் என்பது எமக்கு தெளிவாக தெரியும்.
ஐக்கிய தேசியக் கட்சியிடமோ, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிடமோ விசாரணைகளை நடத்துமாறு கோருவது அறிவீனமற்ற செயல்.
1989ம், 90 ஆம் ஆண்டுகளில் கொலை செய்யப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டியுள்ளது. ஜே.வி.பி அதனை நிறைவேற்றும் என நாங்கள் உறுதியளித்துள்ளோம்.
இந்த குற்றங்கள் தொடர்பில் என்றாவது ஒருநாள் மக்கள் தீர்ப்பாயம் அமைக்கப்பட வேண்டும் எனவும் அது கட்டாயமானது எனவும் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அதேவேளை இலங்கையில் வடக்கில் நடைபெற்ற போரின் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து முழுமையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.
எனினும் அப்படியான விசாரணைகளை மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் மேற்கொள்ளும் என எதிர்பார்க்க முடியாது என்றும் அனுரகுமார திஸாநாயக்க கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyFRdLZiu0.html
விடுதலைப் புலிகளை கைது செய்வதற்காக 4000 இலங்கை அகதிகளிடம் மலேசியா விசாரணை
[ வியாழக்கிழமை, 29 மே 2014, 10:04.00 AM GMT ]
மலேசியாவின் பொலிஸ் மா அதிபர் காலிட் அபுபக்கர் இதனைத் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. இது தடுக்கப்பட வேண்டும்.
மலேசியாவில் வசித்து வருகின்ற 4000 இலங்கை அகதிகள் மத்தியில் இவ்வாறான விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களும் மறைந்திருக்க கூடும்.
அவர்களை கைது செய்வதற்காக 4000 அகதிகளை விசாரணைக்கு உட்படுத்தவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyFRdLZiu6.html
Geen opmerkingen:
Een reactie posten