தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 29 mei 2014

ஊடகவியலாளர்களை வாசலில் துரத்திய “CV” இதுவா ஐயா ஜனநாயகம்??


பிரதமர் மோடியைச் சந்திக்க “CV” வராமை தவறாம்! மகிந்தருடன் திரும்பிய EPDP லேடி

அவர் தொடர்ந்து கூறுகையில்;
பதவியேற்பு விழாவிற்குச் செல்வது மிகப்பெரிய சந்தர்ப்பம். அதற்கான அழைப்பு ஜனாதிபதியினால் முதலமைச்சருக்கு விடுக்கப்பட்ட போதும், அவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் இணைந்து அதனை மறுத்து, தவறிழைத்துவிட்டார்கள். தொடர்ந்து தமிழர் சார்பாக பிரதிநிதியொருவரை அழைத்துச் செல்லும் பொருட்டு ஜனாதிபதியினால் எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
பதவியேற்பு முடிந்த மறுநாள் நாங்கள் கலந்துரையாடுவதற்கு 30 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது. இதன்போது மோடிக்கும் இலங்கை ஜனாதிபதிக்கும் இடையில் இணக்கமான சுமூகமான பேச்சுக்கள் இடம்பெற்றன. இதில் 13 ஆவது திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்ற வகையில் பேச்சுக்கள் இருந்தன.
அத்துடன் வடமாகாணத்தில் இடம்பெற்ற தேர்தல், மீள்குடியேற்றம், அபிவிருத்தி என்பனவற்றை ஜனாதிபதி மோடிக்கு எடுத்துரைக்கும் போது, கல்விப் பொதுத் தராதரச் சாதாரண தரத்தில் வடமாகாணம் முதலிடம் பெற்றமையும் எடுத்துரைத்ததாக யோகேஸ்வரி மேலும் தெரிவித்தார்.

ஊடகவியலாளர்களை வாசலில் துரத்திய “CV” இதுவா ஐயா ஜனநாயகம்??

செய்தி சேகரிப்பதற்காக ஊடகவியலாளர்கள் வடமாகாண முதலமைச்சரின் வாசஸ்தலத்திற்கு வரவேண்டாம் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதன்கிழமை (28) தெரிவித்துள்ளார். செய்திகளினை தாங்கள் அறிக்கைகளாக அனுப்பி வைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளதுடன் இது தொடர்பில் முதலமைச்சரினால் குறிப்பொன்று ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் வாசஸ்தலத்தில் நடைபெறும் எந்தக் கூட்டத்திற்கு; பத்திரிகையாளர் அழைக்கப்படமாட்டார்கள். அத்துடன், அது தொடர்பான செய்திகள் 1 மணித்தியாலத்திற்குள் அறிக்கைகளாக அனுப்பி வைக்கப்படுமெனவும் அந்த குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பரவிப்பாஞ்சான் புலிகளின் தலைவர் உரையாற்றிய இடமாம் இராணுவப் பேச்சாளர்!

பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கிளிநொச்சி பரவிப்பாஞ்சானில் இன்று நடைபெற்ற போராட்டம் குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
விடுதலைப் புலிகளுக்கு சொந்தமான அந்தக் காணிகளுக்கான உறுதிகள் குறித்த மக்களிடம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். அத்துடன் ஆண்டுதோறும் நவம்பர் 27 அன்று பிரபாகரன் அங்கிருந்தே மாவீரர் தின உரையை ஆற்றி வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான காணியையே தாம் கையகப்படுத்தியுள்ளதாக தெரிவித்த அவர் அந்தக் காணியை எந்தக் காரணத்திற்காகவும் மக்களிடம் கையளிக்கப்போவதில்லை என்றும் தெரிவித்தார்.
இன்று கிளிநொச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 42பேர் கலந்து கொண்டதாகவும் இராணுவப் பேச்சாளர் இதன்போது தெரிவித்தார். இராணுவத்தினர் மக்களின் காணிகளை கையளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Geen opmerkingen:

Een reactie posten