[ புதன்கிழமை, 28 மே 2014, 05:05.35 AM GMT ]
சிவிலியன்களை பயங்கரவாதத்திலிருந்து மீட்டமையை சில மேற்குலக நாடுகள் துரோகச் செயலாக நோக்குகின்றன.
இராணுவத்தின் பணிகள் குறித்து உரிய பிரச்சாரம் அளிக்கப்படவில்லை.
உரிய முறையில் இராணுவத்தின் பணிகள் பிரச்சாரம் செய்யப்பட்டிருந்தால் மேற்குலக நாடுகளின் போலிக் குற்றச்சாட்டுக்களை தவிர்த்திருக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
இராணுவத்தினருக்காக நடத்தப்பட்ட பயிற்சி பட்டறையொன்றின் நிறைவில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyFRcLZio3.html
நவிபிள்ளையின் அலுவலகம் இலங்கைமீது தீவிர கவனம்! இரு வாரங்களில் விசாரணை ஆரம்பம்
[ புதன்கிழமை, 28 மே 2014, 05:07.52 AM GMT ]
இலங்கையின் கடந்தகால, தற்கால மனித உரிமை மீறல்கள், நீதிக்குப் புறம்பான தண்டனை, பொறுப்புக்கூறல், மீள் நல்லிணக்கப்பாடு ஆகியவை குறித்து தொடர்ந்தும் கண்காணிக்கப்படும் என்று ஐ.நா. மனித உரிமைகள் சபை தெரிவித்துள்ளது.
கடந்த ஏழு வருடங்களாக இலங்கையின் போர் விவகாரம் தொடர்பான விடயங்களை ஆய்வுக்கு உட்படுத்திவரும் ஐ.நா. செயலகம், சர்வதேச சமூகத்தோடும் ஐ.நா. மனித உரிமைகள் சபையோடும் இணைந்து தொடர்ந்தும் இக்கண்காணிப்பை மேற்கொள்ளும் என்றும் இது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் ஐ.நா.சபை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
தற்போது ஐ.நா. உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை தலைமையில் இயங்கும் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகராலய செயலகம், ஜெனிவாவிலுள்ள ஐ.நா. செயலகத்தில் கடந்த திங்கட்கிழமை 2013 ம் ஆண்டுக்கான புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 2012 ம் வருட அமர்விலும், 2013 ம் வருட அமர்விலும், இலங்கை விவகாரம் தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் பலாபலன்கள் குறித்தும் இலங்கையின் நிலைவரம் குறித்தும் சர்வதேச சமூகம் தொடர்ந்தும் அவதானிப்பை மேற்கொள்ளும் என்றும் புதிய அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 2012 ம் வருட அமர்விலும், 2013 ம் வருட அமர்விலும், இலங்கை விவகாரம் தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் பலாபலன்கள் குறித்தும் இலங்கையின் நிலைவரம் குறித்தும் சர்வதேச சமூகம் தொடர்ந்தும் அவதானிப்பை மேற்கொள்ளும் என்றும் புதிய அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையில் 2002 முதல் 2009 ஆம் ஆண்டுவரை நடைபெற்ற போரின்போது இழைக்கப்பட்ட பெரும் மனித உரிமைகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் மீதான விசாரணையை மேற்கொள்ளுமாறு இவ்வருட மார்ச் அமர்வில் அமெரிக்கா தீர்மானமொன்றின் மூலம் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்துக்கு ஆணை வழங்கியுள்ளது. இன்னும் இரு வாரங்களில் நவநீதம்பிள்ளையின் அலுவலகம் இந்த விசாரணையை ஆரம்பிக்கவுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
மனித உரிமைகளுக்கான ஆணையாளர் அலுவலக அறிக்கையில், ஆணையாளர் நவநீதம்பிள்ளை பல விடயங்களில் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
அநேக விவகாரங்களில் இலங்கை அர்த்தபுஷ்டியான நடவடிக்கைகளை மேற் கொள்ளவில்லை. பொறுப்புக்கூறல் கடப்பாடு, வடபகுதியில் அதிகளவில் இராணுவக் குவிப்பு, இடம்பெற்றுக் கொண்டிருக்கும் மனித உரிமை மீறல்கள், மதரீதியான வன்முறைகளை முடுக்கிவிடுதல், சுயாதீன நீதித்துறைக்கு குந்தகமான நடவடிக்கை ஆகியவற்றை நவநீதம்பிள்ளை முன்வைத்துள்ளார்.
மனித உரிமைகள் பேரவையின் 2013 ம் வருட அமர்வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்ட பல அம்சங்கள், 2014 மார்ச் அமர்வுக்கு முன்னர் நிறைவேற்றப்பட்டிருக்கவேண்டும். எனினும் எதுவும் நடக்கவில்லை என்றும் அவர் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyFRcLZio4.html
Geen opmerkingen:
Een reactie posten