[ சனிக்கிழமை, 31 மே 2014, 10:36.06 AM GMT ]
இணையத்தள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கங்கொடவில சோம தேரரின் வருகைக்கு பின்னர், கடந்த சில தசாப்தங்களாக சிங்கள பௌத்த இனவாதத்திற்கு புதிய புத்துணர்ச்சி வழங்கப்பட்டுள்ளது.
விமல் வீரவன்ஸ, சம்பிக்க ரணவக்க போன்றவர்கள் அரசாங்கத்தில் இருந்து ஒதுங்கி இருப்பதால் ஏற்பட்டுள்ள சிங்கள இனவாத முகாமின் பிளவை பயன்படுத்தி சிங்கள இனவாதத்தை தோற்கடிக்க வேண்டியது முக்கியமானது.
இதற்காக மாதுளுவாவே சோபித தேரரை பயன்படுத்தி கொள்ள முடியும்.
90 ஆம் ஆண்டு கடைசியிலும் அதன் பின்னரும் சிங்கள பௌத்த அமைப்புகளுக்கு புதிய புத்துயிர் கொடுக்கப்பட்டது.
கங்கொடவில சோம தேரரின் தலையீடு, அதன் பின்னரான ஜாதிக ஹெல உறுமயஈ வெகுஜன சுதந்திர முன்னணி, ஜே.வி.பி ஆகியன மிகவும் ஆக்கிரமிப்பு ரீதியில் சிங்கள இனவாதத்தை முன்னெடுத்தன.
இதனையடுத்து தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம், அல்லி மலர் அமைப்பு, அண்மைய கால பொதுபல சேனா, இராவணா பலய ஆகியன வன்முறை செயற்பாடுகளை ஆரம்பித்தன.
சிங்கள இனவாதத்தின் இரண்டாம் கட்ட எழுச்சியாகவே நான் இதனை காண்கின்றேன்.
எனினும் 80 ஆம் ஆண்டுகளில் சிங்கள இனவாத பாசறையில் முன்னணி தலைவராக இருந்த மாதுளுவாவே சோபித தேரர் இன்று இனவாதம் இல்லாதவர்களுடன் இணைந்து செயற்படும் நபராக மாறியுள்ளார்.
இதன் காரணமாகவே சிங்கள் இனவாத தேசியவாதிகள் மாதுளுவாவே சோபித தேரரை விமர்சித்து வருகின்றனர் எனவும் நிர்மால் ரஞ்சித் தேவசிறி குறிப்பிட்டுள்ளார்.

http://www.tamilwin.com/show-RUmsyFQVLZhv0.html
ஜனாதிபதியிடம் மோடி விடுத்த கோரிக்கையை முழு உலகமும் அறியும்!- தயான் ஜயதிலக
[ சனிக்கிழமை, 31 மே 2014, 11:31.31 AM GMT ]
இலங்கை தமிழர் பிரச்சினை தீர்க்க இந்தியாவின் உதவியை பெற இலங்கை என்ன செய்ய வேண்டும் என்பதை இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடி மிக தெளிவாக கூறியுள்ளதாக முன்னாள் இராஜதந்திரியும், அரசியல் ஆய்வாளருமான கலாநிதி தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார்.
சிங்கள வார இதழ் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் தமிழர்களுடனான அரசியல் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறும் அதற்கான 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை முழுமையான அமுல்படுத்துமாறும் மோடி, ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் கூறியதாக இந்திய வெளிவிவகார செயலாளர் தெரிவித்திருந்தார்.
மோடி கூறியதை இலங்கை செய்யுமா இல்லையா என்பது வேறு பிரச்சினை.
எனினும் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியாவின் உதவியை பெற வேண்டுமாயின் இலங்கை நிறைவேற்ற வேண்டிய அடிப்படையான நிபந்தனையை இந்தியாவின் புதிய பிரதமர் தெளிவாக அறிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கும் இந்திய பிரதமர் மோடிக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின் பின்னர், இந்தியாவின் ஆங்கில தொலைக்காட்சி ஒன்று ஜனாதிபதி மற்றும் யாழ் மாநகர முதல்வர் ஆகியோருடன் நேர்காணலை நடத்தியது.
இதன் போது மோடி, ஜனாதிபதி இடையிலான சந்திப்பில் சொல்லப்பட்ட சில விடயங்களையும் கூறினார்.
பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களுடன் 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை முழுமையான அமுல்படுத்துமாறு மோடி, ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டதாக யாழ் மாநகர முதல்வர் தெரிவித்திருந்தார்.
மோடி இப்படியான கோரிக்கையை விடுத்த இரகசியமான ஒன்றல்ல. இதனை முழு இந்தியா மட்டுமல்ல முழு உலகமும் அறியும் எனவும் தயான் ஜயதிலக்க குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyFQVLZhv4.html
Geen opmerkingen:
Een reactie posten