[ செவ்வாய்க்கிழமை, 27 மே 2014, 07:56.57 AM GMT ]
இந்தச் சந்திப்பின் போது கிளிநொச்சி மாவட்ட மக்களின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக குறிப்பாக இன்னமும் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படாத கிராமங்கள் பற்றிய விடயங்கள் வட்டக்கச்சி பண்ணை ஸ்கந்தபுரம் கரும்புத் தோட்டக் காணி இரணைதீவு பரவிப்பாஞ்சான் பூநகரியின் பொன்னாவெளி பரந்தன் இராசாயன தொழிற்சாலை போன்றவற்றின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக டானியல் பெயின்ரருக்கு விரிவாக பா.உறுப்பினர் சி.சிறீதரனால் விளக்கமளிக்;கப்பட்டது.
மேலும் வடமாகாணசபையின் கீழ் உள்ள நிர்வாகங்களை நடத்துவதற்கு இருக்கக்கூடிய இடையூறுகள் வடக்கில் இடம்பெறும் கைதுகள் தொழில் வாய்ப்பின்மைகள் போன்ற விடயங்களும் தமிழர்களுக்கான நிரந்தர தீர்வு நோக்கிய முன்னெடுப்புகள் பற்றியும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
http://www.tamilwin.com/show-RUmsyFRbLZjuz.html
இரகசியமாக நாடுகடத்தப்பட்ட விடுதலைப்புலிச் சந்தேக நபர்கள்: சுராம் அமைப்பு கண்டனம்
[ செவ்வாய்க்கிழமை, 27 மே 2014, 08:06.37 AM GMT ]
மலேசிய பாதுகாப்பு அதிகாரிகள் இரகசியமான முறையில் மூன்று இலங்கையர்களை நேற்று இரவு நாடு கடத்தியதாக, இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த சுராம் அமைப்பின் பேச்சாளர் ஆர்.தேவராஜன் தெரிவித்துள்ளார்.
சட்ட அணுகுமுறைகள் இன்றி இவர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தினார்.
நாடு கடத்தப்பட்ட மூவரில் ஒருவர் சார்பில் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி நீவ் சின் யெவ் இந்த ஊடக சந்திப்பில் பங்கேற்றிருந்தார்.
சந்தேகநபர்களை நாடு கடத்துவது தொடர்பில் அவர்களது உறவினர்கள், சுராம் மற்றும் ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகரகத்துக்கு முன்னறிவித்தல் விடுக்கப்படவில்லை என கூறப்பட்டுள்ளது.
நாடு கடத்தப்படுவதற்கு முன் 11 நாட்கள் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டதாகவும் எனவே சட்ட ஆலோசனைகள் பெற நேரம் மிகவும் குறுகியதாக காணப்பட்டதெனவும் சட்டத்தரணி நீவ் சின் யெவ் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து பொலிஸாருடன் கடந்த நாட்களில் சுமூகமாக செயற்பட்டதால் பிரச்சினை இலகுவில் தீரும் என எதிர்பார்த்திருந்ததாக ஆர்.தேவராஜன் தெரிவித்துள்ளார்.
ஆனால் பொலிஸார் தங்களிடம் பொய் கூறியதாகவும் பொலிஸ் பொறுப்பாளர் கலிட் அபு பக்கரிடம் சந்தேகநபர்கள் குறித்து வினவியபோது பதில் கிடைக்கவில்லை எனவும் பின்னரே அவர்கள் நாடு கடத்தப்பட்டதை அறிந்ததாகவும் ஆர்.தேவராஜன் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மலேசியாவில் கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் மூவர் நேற்று இரவு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இவர்கள் தற்போது பயங்கரவாத விசாரணை பிரிவில் தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyFRbLZju0.html
Geen opmerkingen:
Een reactie posten