[ வியாழக்கிழமை, 29 மே 2014, 03:20.07 AM GMT ]
விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தில் மூன்று தமிழர்களை கைது செய்து, நாடுகடத்தியமைக்கு இலங்கை இராணுவம் மலேசியாவிற்கு பாராட்டுத் தெரிவித்துள்ளது.
மலேசியாவைப் போன்று உலகின் ஏனைய நாடுகளும் பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என இராணுவப் பேச்சாளர் ருவான் வணினிகசூரிய தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு மலேசியாவைப் போன்று ஏனைய நாடுகளும் அர்ப்பணிப்புடன் ஒத்துழைப்பு வழங்கினால் இந்த பூமியிலிருந்து பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க முடியும்.
மலேசியாவில் செயற்பட்டு வந்த மூன்று தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை கைது செய்தமைக்கு நன்றி பாராட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை கைது செய்வதற்கு உலகின் ஏனைய நாடுகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பயங்கரவாதிகளை இல்லாதொழிப்பதற்கு மலேசியா முதல் தடவை ஒத்துழைப்பு வழங்கவில்லை எனவும், ஏற்கனவே பல தடவைகள் இவ்வாறு ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மூன்று தமிழர்கள் நாடு கடத்தப்பட்டமை தொடர்பில் ஐ.நா கவலை- அகதி அந்தஸ்து குறித்து மீளாய்வு செய்ய வேண்டும்: இலங்கை
[ வியாழக்கிழமை, 29 மே 2014, 02:41.47 AM GMT ]
ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான நிறுவனத்தின் தகவல்படி குறித்த மூவரில் இருவர் அகதிகளாவார். ஒருவர் அடைக்கலம் கோரியிருந்தவர்.
இந்தநிலையில் தற்போது அவர்கள் மூவரும் பாரிய பிரச்சினைக்கு உட்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகளின் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
ஏற்கனவே இந்த மூவரையும் நாடு கடத்தப்படுவதை தாமதிக்குமாறு ஐக்கிய நாடுகள் நிறுவனம் மலேசியாவை கேட்டியிருந்தது.
எனினும் நாடு கடத்தப்பட்ட சம்பவம் தமக்கு வருத்தமளிப்பதாக ஐக்கிய நாடுகள் குறிப்பிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் அகதி அந்தஸ்து நிலைப்பாடு மீளாய்வு செய்யப்பட வேண்டும்- இலங்கை
விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் ஐக்கிய நாடுகளின் அகதி அந்தஸ்து அட்டைகளை பெற்றுள்ளமை தொடர்பில் உரிய மீளாய்வு நடவடிக்கைகள் தேவை என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அண்மையில் அகதி அந்தஸ்து மற்றும் அடைக்கலம் கோரியிருந்த மூன்று இலங்கையர்கள் மலேசிய அரசாங்கத்தினால் நாடு கடத்தப்பட்டனர்.
இதனையடுத்தே இலங்கை இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது.
குறித்த மூவருக்கும் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டமை குறித்து இலங்கை அரசாங்கத்துடன் கலந்தாலோசிக்கப்படவில்லை.
எனவே இது தொடர்பில் விசாரணை ஒன்று அவசியம் என்று அரசாங்க அதிகாரி ஒருவரை கோடிட்டு ஆங்கில செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை மலேசியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட தயாபரராஜா என்பவர் 2009 ஆம் ஆண்டில் இருந்து காணாமல் போனோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக இலங்கை இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten