[ திங்கட்கிழமை, 26 மே 2014, 01:54.08 PM GMT ]
வவுனியாவில் இடம்பெற்றுள்ள இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
வவுனியா நயினாமடு கிராமத்தில் வசிக்கும் ஓய்வு பெற்ற உப தபாலதிபர் தம்பிராசா செல்வராசா என்பவரின் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் அவரது மனைவியின் தங்க சங்கிலியை அபகரித்துள்ளனர்.
இதன்போது, உப தபாலதிபர் பயத்தில் செய்வதறியாது வீட்டை விட்டு வெளியே ஓடிய வேளையில் அவரை துரத்திச் சென்று கொள்ளையர்கள் கத்தியால் வெட்டியுள்ளனர்.
இதனால், வெட்டுக்காயங்களுக்கான அவர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இச்சம்பவம் தொடர்பில் கனகராயன்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmsyFRaLZjq5.html
பீ.பி. ஜயசுந்தரவுக்கு அரச உயர்மட்டத்தில் இருந்து கொலை அச்சுறுத்தல்?
[ திங்கட்கிழமை, 26 மே 2014, 01:39.55 PM GMT ]
அமைச்சர் விமல் வீரவன்ஸ ஊடகங்கள் மூலம் ஜயசுந்தரவை கடுமையான விமர்சித்திருந்ததுடன், அவரை பதவியிலிருந்து நீக்குமாறு ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமற்ற வகையில் கோரிக்கை விடுத்துள்ளதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தன.
இதனையடுத்து ஜயசுந்தர பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதுடன், அவருக்கு பதிலாக சுகாதார அமைச்சின் செயலாளர் நிஹால் ஜயதிலக்க நியமிக்கப்பட்டார்.
குறித்த பதவியில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து நிதியமைச்சின் செயலாளர் பதவியில் ஜனாதிபதி தன்னை பலவந்தமாக வைத்திருப்பதாகவும், தனக்கு சர்வதேச நாணய நிதியத்தில் தொழில் வாய்ப்பு இருப்பதாகவும் தனக்கு இன்றைய அரசாங்கத்தின் பல இரகசியங்கள் தெரியும் எனவும் தான் இல்லாது இந்த அரசாங்கத்தினால் 6 மாதங்களுக்கு கூட பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாது எனவும் ஜயசுந்தர கூறியிருந்தார்.
அவரது இந்த கருத்துக்களை பல ஊடகங்கள் வெளியிட்டிருந்தன.
இதனை அறிந்து கொண்ட அரசாங்கத்தின் உயர் மட்டத்தினர் சிலர் குழப்பமடைந்துள்ளனர். தமது முறைகேடான கொடுக்கல் வாங்கல்கள் வெளியாகி விடும் நிலைமை தோன்றியுள்ளதால், அதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என அவர்கள் கலந்துரையாடியுள்ளனர்.
பீ.பி. ஜயசுந்தரவின் கருத்தால், கடும் கோபமுற்றிருந்த அரசாங்கத்தின் உயர்மட்ட உறுப்பினர் ஒருவர், ஜயசுந்தரவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, உயிர் மேல் ஆசையிருந்தால், வாயை மூடிக்கொண்டிருக்குமாறு கூறியுள்ளார்.
இதனால் ஜயசுந்தர கடும் வெறுப்படைந்துள்ளதாக கூறப்படுகிறது. அரசாங்கத்தினால் தன்னை ஆட்டுவிக்க முடியாது எனவும் எனினும் தன்னால் இந்த அரசாங்கத்தை ஆட்டுவிக்க முடியும் எனவும் ஜயசுந்தர தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyFRaLZjq4.html
Geen opmerkingen:
Een reactie posten