குறைவந்துள்ளன இலங்கைக்கான அமெரிக்காவின் உதவிகள் – யாழில் உற்பத்திகளை ஊக்குவிக்கும் கண்காட்சி.!
குறைவந்துள்ளன இலங்கைக்கான அமெரிக்காவின் உதவிகள்!!
இலங்கைக்கான அமெரிக்காவின் உதவிகள் மிகவும் குறைவடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2012ம் ஆண்டு அமெரிக்கா இலங்கைக்கு 168 மில்லியன் டொலர்களை உதவியாக வழங்கி இருந்தது.
எனினும் இது கடந்த வருடம் 46 மில்லியன்களாக குறைவடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணைகளை நடத்த வேண்டும் என்று கோரி வருகின்ற நிலையில், இந்த உதவி குறைப்பு இடம்பெற்றுள்ளது.
அத்துடன் இலங்கையின் அரசியல் சூழ்நிலைகள், அமெரிக்காவின் நிதி உதவியுடன் இயங்குகின்ற தொண்டு நிறுவனங்களின் செயற்பாடுகளை மட்டுப்படுத்தி இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
யு.எஸ்.எயிட் அமைப்பின் நிர்வாகி டெனிஸ் ரோலின்ஸ் இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன் அபிவிருத்தி மற்றும் நிவாரண வேலைத்திட்டங்களுக்கு பதிலாக, இலங்கையில் ஜனநாயக அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கே உதவிகளை வழங்க தீர்மானித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





http://www.jvpnews.com/srilanka/71273.html
அமைச்சரான சுஸ்மா இலங்கைக்கு கிடைத்த போனசாம்…
சுஸ்மா சுவராஜ் எதிர்கட்சித் தலைவராக இருந்த போது, இலங்கை வந்த இந்தியாவின் 12 பேர் கொண்ட நாடாளுமன்றத் குழுவுக்கும் தலைமை தாங்கி இருந்தார். இதன் போது அவருக்கு எதிராக தமிழ்நாட்டில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டிருந்தன. அத்துடன் அவர் இலங்கையில் ஆறு நாட்கள் தங்கி இருந்து, இறுதியாக செல்லும் போது தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் இணைய வேண்டும் என்பதை வலியுறுத்தி இருந்தார்.
எனவே அவர் இலங்கை அரசாங்கத்தின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ளக் கூடியவர் என்பதால், அவர் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டமை இலங்கைக்கு கிடைம் போனஸ் என்று அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.
http://www.jvpnews.com/srilanka/71277.html
Geen opmerkingen:
Een reactie posten