நரேந்திர மோடி தலைமையிலான புதிய இந்திய அரசின் கீழ் இலங்கை - இந்திய உறவுகள் மேலும் வலுவடையும் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் புதிய வெளிவிவகார அமைச்சராக பொறுப்பேற்றுள்ள சுஷ்மா சுவராஜிக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் இதனை கூறியுள்ளார்.
சுஷ்மா சுவராஜ் தனது இலங்கை விஜயத்தின் போது இலங்கை - இந்திய உறவுகள் தொடர்பில் அண்மை காலத்தில் புதிய உயிர்ப்பை கொடுத்ததாகவும் அமைச்சர் பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
சுஷ்மா சுவராஜ் 2012 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழுவிற்கு தலைமை தாங்கி இலங்கை வந்திருந்திருந்தார்.
அவரது இந்த விஜயத்தினால் இரு நாடுகளுக்கும் இடையிலான சம்பிரதாயபூர்வமான நட்பு மாத்திரமல்லாது பிணைப்புகள் உறுதியாகியது.
இந்தியாவின் புதிய வலுவான அரசாங்கம் தெற்காசிய பிராந்தியத்தில் பொருளாதார முன்னேற்றம், ஸ்திரத்தன்மைக்கு காரணமாக அமையும்.
புத்த தர்மத்தின் பிறப்பிடமாக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான சமய தொடர்புகளும் மேலும் வளர்ச்சியடையும்.
பொருளாதாரம், சமூக அபிவிருத்தி, அமைதிக்காக இந்தியாவும் இலங்கையும் மேற்கொள்ளும் முயற்சிகள் பிராந்தியத்திற்கு மட்டுமல்லாது முழு உலகத்திற்கும் முக்கியமானது எனவும் அமைச்சர் பீரிஸ், சுஷ்மா சுவராஜிக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyFRdLZiv6.html
Geen opmerkingen:
Een reactie posten