தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 28 mei 2014

மோடி முட்டாள் இல்லை! மன்மோகனுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுமாறு மகிந்தவிடம் கூறியுள்ளார்!- அசாத் சாலி



இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் யாழ். விஜயம்! முதல்வர் விக்னேஸ்வரனுடன் சந்திப்பு
[ புதன்கிழமை, 28 மே 2014, 10:12.24 AM GMT ]
அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் றொபின் மூடி மற்று் அவுஸ்திரேலிய வெளிநாட்டலுவல்கள் மற்றம் வாணிபம் திணைக்களப் பணியாளர் க்ரேவ்ஸ், இலங்கையில் நடைபெறும் செயற்திட்டங்களுக்கு பொறுப்பான அலுவலர் ஆகியோர் வடமாகாணத்தில் அவுஸ்திரேலிய உதவியுடன் மேற்கொண்டுவரும் செயற்திட்டங்களை பார்வையிட வந்திருந்தனர்.
வடமாகாணசபை தங்களிடமிருந்து ஏதாவது உதவி எதிர்பார்க்கிறார்களா, வடமாகாண சபை தனித்து இயங்கப் போதுமான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதா என்பதையும் அறிந்துகொள்ள விரும்புவதாகத் தெரிவித்தார்.
அரசியல் ரீதியாக தனித்து இயங்கப் பல முட்டுக்கட்டைகள் விதித்திருப்பதாக கூறி அவற்றை நான் எடுத்துக் கூறினேன். பிரதம செயலாளர் சம்பந்தமாகச் சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
பிரதம செயலாளர் அனுசரணையுடன் பதவிப் பொறுப்பை ஏற்க முடியுமென்றும் அவ்வாறு வடமாகாணத்தில் நடைபெறவில்லை எனவும் எடுத்துக்கூறினேன். எவ்வளவுதான் வடமாகாணத்திற்கு முன்னுரிமை வழங்கப்படுவதாக ஜனாதிபதியும் ஆளுநரும் கூறினாலும் அது நடைமுறையில் நடைபெறவில்லை என்பதையும் எடுத்துக்கூறினேன்.
ஆற்றல் மேம்பாட்டுத் திட்டங்கள் எமக்கு அவசரமாகத் தேவைப்படுவதை எடுத்துக் கூறியபோது அது சம்பந்தமாகப் பரிசீலித்து தாம் ஏதேனும் உதவி செய்வதாக உயர்ஸ்தானிகர் கூறினார்.
போரினால் பாதிக்கப்பட்ட விதவைப் பெண்கள், வறியவர்கள், வறுமையில் வாடுவோர் தொடர்பான திட்டங்களை அவர்களின் வாழ்க்கையில் மேன்மை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை எடுத்துக் கூறினேன்.  எவ்வகையான வழிகளில் இவர்களுக்கு உதவலாம் என்பதையும் தெனிவாக விளக்கிக் கூறினேன்.
வடமாகாணத்தில் மிகப்பெரிய பிரச்சினை நீர்வளம் மற்றும் நிலவளம் என்பவற்றை இராணுவம் கையகப்படுத்தியுள்ளதால் ஏற்பட்டுள்ளது என்பதை எடுத்து விளக்கினேன். அரசாங்கம் தமக்குத் தேவையான யெற்திட்டங்களைச் செயற்படுத்த முன்வருகிறார்களே தவிர மக்களுக்குத் தேவையான செயற்திட்டங்களை மக்களின் பிரதிநிதி மூலம் அறிந்து செயற்படுத்த முன்வருவதில்லை என விளக்கினேன்.
கூட்டம் இனிதாக நிறைவெய்தியது. பின்னர் அவர்கள் கிளிநொச்சி செல்வதாக கூறினர். அங்கு தமது செயற்திட்டங்களைப் பார்வையிட்ட பின்னர் கொழும்பு திரும்புவதாக கூறிச்சென்றனர்.
http://www.tamilwin.com/show-RUmsyFRcLZip7.html
மோடி முட்டாள் இல்லை! மன்மோகனுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுமாறு மகிந்தவிடம் கூறியுள்ளார்!- அசாத் சாலி
[ புதன்கிழமை, 28 மே 2014, 11:44.31 AM GMT ]
இந்திய பிரதமரின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் ஏற்கனவே பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுமாறு புதிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளதாக தேசிய ஐக்கிய முன்னணி தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் முன்னணியின் தலைவர் அசாத் சாலி இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்வதற்காக இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மூன்று இந்திய போதைப் பொருள் விற்பனையாளர்களை விடுதலை செய்வதா என்பது குறித்து கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்திய மீனவர்கள் எவரும் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கவில்லையா?. போதைப் பொருள் விற்பனையாளர்கள் மட்டுமா தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்?.
இந்தியாவின் 15வது பிரதமராக பாரதீய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவர் நரேந்திர மோடி தெரிவானார். இலங்கை அரசாங்கம் நினைப்பது போல் புதிய பிரதமர் மோடி ஒரு மூடன் அல்ல.
இந்தியாவில் ஆட்சி மாறியதால் அங்கு அனைத்தும் மாறி விடும் என்று இலங்கை அரசாங்கம் எண்ணுகிறது. அது அப்படியல்ல. இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் அந்த நாட்டை சேர்ந்த வெளிநாட்டு தூதுவர் பதவிகளில் எந்த மாற்றமும் ஏற்படாது.
இந்தியாவில் 121 கோடி மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக அந்நாட்டு புதிய பிரதமர் வெறும் 23 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களை மட்டுமே நியமித்துள்ளார். முழு அமைச்சர்களின் எண்ணிக்கை 45 பேர் மட்டுமே.
ஆனால் இரண்டு கோடி மக்கள் தொகையை கொண்ட இலங்கையில் அமைச்சரவை அந்தஸ்துள்ள 65 அமைச்சர்கள் உட்பட 123க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் இருக்கின்றனர். இலங்கை ஜனாதிபதி இந்தியாவை பார்த்து வெட்கப்பட வேண்டும்.
இந்தியாவிலும் ராஜபக்ச ஒருவர் ஆட்சிக்கு வந்துள்ளதாக அண்மையில் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்திருந்தார்.
இந்திய பிரதமரின் தேர்தல் கருப் பொருள் நல்லாட்சி என்பதாகும். அது இலங்கையில் போன்று ராஜபக்சவினரின் நிர்வாகத்தை அமுல்படுத்துவதல்ல.
இந்தியாவில் இதுவரை ஆட்சி செய்து வந்த அரசாங்கங்கள் ஏனைய அரசியல் கட்சிகளின் ஆதரவுடனேயே ஆட்சி நடத்தி வந்துள்ளன.
பாரதீய ஜனதா கட்சி எந்த கட்சியின் ஆதரவின்றி ஆட்சியமைக்கும் பலத்தை பெற்றுள்ளது.
பண்டாரநாயக்கவுக்கோ, சிறிமாவோ பண்டாரநாயக்கவுக்கோ, சந்திரிக்கா பண்டாரநாயக்கவுக்கோ, மகிந்த ராஜபக்சவுக்கோ இப்படியான வெற்றியை பெற முடியவில்லை.
இந்தியாவின் புதிய பிரதமர் பதவியேற்பதை முன்னிட்டு இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சகல இந்திய மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தார். இதில் வேடிக்கை என்னவெனில் இலங்கை இந்திய மீனவர்கள் எவரும் தடுப்பில் இல்லை.
போதைப் பொருள் குற்றம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று இந்தியர்கள் மாத்திரமே இலங்கையில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் எண்ணிக்கை பற்றி கூட ஜனாதிபதி அறியாது இருப்பது கவலைக்குரிய விடயம்.
இந்தியாவின் மோடியின் அரசாங்கத்தை போல் இலங்கையிலும் ஒரு அரசாங்கம் ஏற்பட வேண்டும். அதற்கான பொது மேடை உருவாக்கப்பட வேண்டும். பொது வேலைத்திட்டம் தயாரிக்கப்பட வேண்டும்.
அரசாங்கத்தில் இருக்கும் சிலர் இதற்கு சிறந்த ஒத்துழைப்புகளை வழங்குவர். அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் உட்பட 17 பேர் அரசாங்கத்தில் இருந்து விலகி எதிர்க்கட்சியில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் அரசாங்கத்தில் இருக்கும் 60 பேர் கொண்ட அணி எதிர்க்கட்சியில் இணைய தயாராக உள்ளது. இதனால் பொது மேடை ஒன்றை உருவாக்கி எவ்வித சிரமமும் இன்றி இந்த அரசாங்கத்தை விரட்டும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்க முடியும் என்பது எமது நம்பிக்கை எனவும் அசாத் சாலி குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyFRcLZiq0.html

Geen opmerkingen:

Een reactie posten