மந்திரி பதவி கிடைக்கும் என எதிர்பார்த்த பல தலைவர்களுக்கு அந்தப் பதவி கிடைக்காமல் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. பாரதீய ஜனதாவின் தலைவர்களாக பதவி வகித்து, இன்றும் முன்னணி தலைவர்களாக திகழ்பவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி. ஆனால் இவ்விரு தலைவர்களுக்கும் நரேந்திர மோடியின் மந்திரிசபையில் இடம் கிடைக்கவில்லை. இதற்கு என்ன காரணம் என்பது இப்போது தெரியவந்துள்ளது.
நரேந்திர மோடியின் மந்திரிசபையில் இடம் பெறுகிற மந்திரிகளின் அதிகபட்ச வயது 75 என பாரதீய ஜனதா கட்சியின் மையக்குழு நிர்ணயித்துள்ளது. இந்த வரையறையை அத்வானியும், முரளி மனோகர் ஜோஷியும் கடந்து விட்டனர். அத்வானிக்கு வயது 82. முரளி மனோகர் ஜோஷிக்கு வயது 80.
அத்வானி தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவர் பொறுப்பினை ஏற்பார் எனவும், முரளி மனோகர் ஜோஷிக்கு ஏதாவது ஒரு பெரிய மாநிலத்தில் கவர்னர் பதவி வழங்கப்படும் எனவும் தகவல்கள் கூறுகின்றன. இதே போன்று நிதி மந்திரி பொறுப்பு ஏற்பார் என எதிர்பார்க்கப்பட்ட அருண் ஷோரிக்கு மந்திரி பதவி கிடைக்கவில்லை. அவர் மத்திய அரசின் ஆலோசகராக நியமிக்கப்படலாம் என டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.
இமாச்சல பிரதேச முதல்–மந்திரி பிரேம் குமார் துமாலின் மகன் அனுராக் தாக்குருக்கும் எதிர்பார்த்தபடி, மந்திரி பதவி கிடைக்கவில்லை. மோடியின் எழுதப்படாத விதி, அரசியல்வாதிகளின் வாரிசுகளுக்கு மந்திரிசபையில் இடம் இல்லை என்பதாம். அதன்படிதான் அனுராக் தாக்குருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது.
- See more at: http://www.canadamirror.com/canada/26685.html#sthash.err7hdcm.dpuf
Geen opmerkingen:
Een reactie posten