கிழக்கு மாகாண சபையின் அரசின் முக்கியஸதர் திடீர் ராஜினாமா..
கிழக்கு மாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர் டாக்டர் துரையப்பா நவரெட்ணராஜா மாகாண சபை உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். மாகாண சபை உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வது தொடர்பிலான கடிதத்தை துரையப்பா நவரெட்ணராஜா கடந்த 21ஆம் திகதி தம்மிடம் கையளித்ததாக கிழக்கு மாகாண சபையின் செயலாளர் எம்.சி.எம்.சரீப் குறிப்பிட்டார்.
இந்த நிலையில் இவரது இராஜpனாமா அறிவித்தலை தேர்தல்கள் ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாக கிழக்கு மாகாண சபையின் செயலாளர் தெரிவித்துள்ளார். இதற்கமைய இவரது வெற்றிடத்திற்கு புதிதாக நியமிக்கப்படுபவர் தொடர்பான தீர்மானத்தை தேர்தல்கள் ஆணையாளர் மேற்கொள்வார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் துரையப்பா நவரட்ணராஜா தமது இராஜினமாவிற்கான காரணத்தை பதவி விலகல் கடிதத்தில் குறிப்பிடவில்லை என கிழக்கு மாகாண சபையின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/70731.html
“மஹிந்தவுக்கு மோடி அழுத்தம் கொடுக்க வேண்டும்” : என் ராம்
அமைச்சரவை அனுபவம் இல்லாத பலர் இம்முறை பதவி பெற்றுள்ளனர் என்றும், தொடர்பில்லாத சில முக்கியமான அமைச்சுக்களை ஒரே அமைச்சரிடம் கொடுத்துள்ளது புரிந்துகொள்ள முடியாததாக இருக்கிறது என்றும் அவர் கூறுகிறார்.
மோடி தலைமையிலான அமைச்சரவையில் மதச்சிறுபான்மையினர், வடகிழக்கு மாநிலம், பழங்குடியினத்தவர் ஆகியோருக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை என்றும், அதில் கூடுதலாக கவனம் செலுத்தப்பட்டிருக்கலாம் என்றும் ராம் தெரிவித்தார்.
தெற்காசிய நாடுகளின் தலைவர்கள் பதவியேற்பு விழாவில் பங்குபெற்றது ஒரு சிறப்பான அம்சம் எனவும், அது வரவேற்கத்தக்க ஒரு முன்னெடுப்பு என்றும், அதை அடித்தளமாகக் கொண்டு முன்னேறங்களை காண வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.
இலங்கை தொடர்பில், தமிழ் மக்களுக்கு உரிய அதிகாரப் பகிர்வை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆசோசனையும் அறிவுரையும் வழங்க வேண்டும் எனவும் என் ராம் கூறுகிறார்.
மோடியின் பதவியேற்பு விழாவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா போயிருக்கலாம் என்றும், மாநில அரசியலைக் கருத்தில் கொண்டே அவர் எச்சரிக்கையாக ஒரு முடிவை எடுத்துள்ளார் என்றும், அது புரிந்து கொள்ளக் கூடியதே எனவும் அவர் சொல்கிறார்.
தமிழகத்துக்கு ஒரே ஒரு அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது, போதுமானதாக இல்லை, இது வருந்தக் கூடிய விஷயமாக இருந்தாலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில், வேறு வழியில்லை எனவும் அவர் தமிழோசையிடம் கூறினார்.
BBC
http://www.jvpnews.com/srilanka/70737.html
Geen opmerkingen:
Een reactie posten