தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 26 mei 2014

புலிகளை கைது செய்ய மலேசியாவில் விசேட தேடுதல் வேட்டை

கடற்புலித் தலைமையகப் பகுதியில் இராணுவ ஹெலிகொப்டர் பாகங்கள்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கடற்புலிகள் தலைமையகம் அமைந்துள்ள முல்லைத்தீவு, சாளை கடற்பரப்பிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட ஹெலிகொப்டரின் சிதைவுகளில் உப்பு கலந்திருப்பதால் அதனை உடனடியாக அடையாளம் காண முடியாதுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.
யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில், கடற்புலிகளின் முகாம் மீது அடிக்கடி தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதற்காக எம்.ஐ 24 மற்றும் எம்.ஐ 17 ரக தாக்குதல் விமானங்கள் பயன்படுத்தப்பட்டன.
இவ்வாறானதொரு நிலையில், இன்று கடலிலிருந்து மீட்கப்பட்ட ஹெலிகொப்டரைப் பொருத்தவரையில், அது சுமார் ஐந்து வருடமாவது கடலுக்கடியில் இருந்திருக்கலாம் என நம்பப்படுவதாக இராணுவ பேச்சாளர் மேலும் கூறினார்.
http://www.jvpnews.com/srilanka/70598.html

புலிகளை கைது செய்ய மலேசியாவில் விசேட தேடுதல் வேட்டை

(2013 இறுதிப் பகுதியில் இராணுவத் தளபதியுடன் பாதுகாப்புச் செயலர் மலேசியாவில்) தமிழீழ விடுதலைப் புலிகளை கைது செய்ய மலேசியாவில் விசேட தேடுதல் வேட்டையொன்று முன்னெடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர்களிடமிருந்து வெளிநாட்டு நாணயங்கள், மலேசிய பணம், விடுதலைப் புலிகளின் பிரச்சாரப் பொருட்கள் உள்ளிட்டன மீட்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. குடிவரவு குடியகழ்வு சட்டத்தினை மீறியதன் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், இதற்கு மேலதிகமாக தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் மலேசியாவில் தங்கியிருக்கக் கூடுமென்ற அச்சம் காரணமாக தேடுதல் வேட்டைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.Gota-Malaysia
http://www.jvpnews.com/srilanka/70605.html

Geen opmerkingen:

Een reactie posten