தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 29 mei 2014

கோத்தபாய தொடர்பான செய்திகளை சேகரிக்க ஏன் தடை: சுதந்திர ஊடக இயக்கம் கேள்வி

அபிவிருத்தி செயற்பாடுகளை மறைக்கும் தேவையில்லை: ஜனாதிபதி
[ வியாழக்கிழமை, 29 மே 2014, 01:43.22 PM GMT ]
அபிவிருத்தி செயற்பாடுகளை மறைப்பதற்கு அரசாங்கத்திற்கு எந்த தேவையும் இல்லை எனவும் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகளை மறைக்காமல் அரசாங்கம் நாட்டுக்கு முன்வைக்கும் எனவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்ததுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற 2013 ஆம் ஆண்டுக்கான நிதியமைச்சின் வருடாந்த அறிக்கை வெளியிட்டு வைக்கும் நிகழ்வில் பேசும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஒரு நோக்கத்தின் அடிப்படையில் பயணிக்கும் போது போகும் பாதையை எம்மால் தெளிவுப்படுத்த முடியும்.
நாம் எந்த விதத்தில் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பி இருக்கின்றோம். நாம் இந்த இடத்திற்கு வந்த பின்னணி என்ன என்பதையும் மறக்க வேண்டாம்.
நாங்கள் ஆட்சிக்கு வரும் முன் இந்த நாட்டில் காணப்பட்ட நிலைமை என்ன?. பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்ட நாடு. 30 வருடங்களாக எமக்கு பாரிய பிரச்சினையாக இருந்து இருந்து வந்தது.
ஒரு புறம் பயங்கரவாதம் மற்றும் சுனாமியினாலும் நாம் பாதிக்கப்பட்டோம். இவை அனைத்துடன் எமக்கு எமது பயணத்தை ஆரம்பிக்க வேண்டியிருந்தது.
வீழ்ச்சியடைந்த, வலுவிழந்த பொருளாதாரமே எமக்கிருந்தது. இது பற்றிய புரிதல் இருக்கவில்லை. வரலாற்றில் எமக்கு என்ன நடந்தது. தற்போது என்ன நடக்கின்றது.
தற்போது உள்ள விடயங்கள் குறித்து விமர்சிக்கும் போது, எங்கிருந்து இந்த இடத்திற்கு வந்தோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyFRdLZiw1.html
கோத்தபாய தொடர்பான செய்திகளை சேகரிக்க ஏன் தடை: சுதந்திர ஊடக இயக்கம் கேள்வி
[ வியாழக்கிழமை, 29 மே 2014, 01:15.23 PM GMT ]
இலங்கையின் ஊடகவியலாளர்கள் தமது கடமைகளை மேற்கொள்ளும் போதும், தனது தொழில்சார் பயிற்சிகளில் கலந்து கொள்ளும் போதும் பாதுகாப்பு படையினர் மற்றும் பொலிஸாரினால் ஏற்படுத்தப்படும் தடைகளுக்கு சுதந்திர ஊடக இயக்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
சுதந்திர ஊடக இயக்கத்தின் ஏற்பாட்டாளர் சுனில் ஜயசேகர கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஊடகவியலாளர்கள் தமது தொழிலை தடையின்றி செய்ய தேவையான சூழலை உறுதிப்படுத்துவது அனைத்து ஜனாநாயக அரசுகளிடம் இருந்து எதிர்பார்க்கப்படும் அடிப்படை பொறுப்பாகும்.
எனினும் கடந்த காலம் முழுவதும் இலங்கை ஊடகவியலாளர்கள் அனுபவிக்க நேர்ந்த கசப்பான மற்றும் கொடிய அனுபவங்கள் இலங்கையில் அவ்வாறான சூழல் இன்று இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, கல்கிஸ்சை நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கொன்றில் சாட்சியமளிக்க வந்த சந்தர்ப்பத்தில், அது பற்றிய செய்தியை சேரிக்க ஊடகவியலாளர்கள் முயற்சித்த போது பொலிஸார் அதனை தடுத்தமை மிக அண்மையில் நடைபெற்ற இப்படியான சம்பவங்களில் ஒன்றாகும்.
நாட்டின் ஜனாதிபதி மாத்திரமல்லாது பாதுகாப்பு தரப்பின் தலைவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் மக்களுக்கு தகவல்களை அறிந்து கொள்ளும் செய்திகளை சேகரிக்க பல சந்தர்ப்பங்களில் ஊடகவியலாளர்களுக்கு இடமளிக்கப்பட்டன.
ஆனால், பாதுகாப்புச் செயலாளர் சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் மாத்திரம் ஊடகவியலாளர்களுக்கு அந்த சந்தர்ப்பம் வழங்கப்படாமைக்கு என்ன காரணம் என்பதை தெளிவுப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.
முக்கியமான சிவில் அதிகாரி ஒருவரின் நடவடிக்கையை மக்களுக்கு அறிய செய்ய முடியாமை மற்றும் அதற்கு தடையேற்படுத்துவதன் மூலம் இலங்கைக்குள் ஊடக சுதந்திரம் என்பது பரிதாபகரமான நிலைமையில் இருக்கின்றது என்பதை தெளிவுப்படுத்துகிறது.
இதனை தவிர ஊழலுக்கு எதிராக இலங்கையில் செயற்பட்டு வரும் பிரதான அமைப்பான ட்ரான்ஸ்பேரன்ஸி இண்டர்நேஷனல் இலங்கை நிறுவனம், ஊடகவியலாளர்களுக்காக ஏற்பாடு செய்த பயிற்சி பாசறை ஒன்று பிரதான இராணுவ அதிகாரி ஒருவரின் அழுத்தம் காரணமாக இடைநிறுத்தப்பட்டது.
இலங்கையில் இராணுவமயமாக்கல் எந்தளவுக்கு வேர் பிடித்துள்ளது என்பதை இந்த சம்பவம் வெளிக்காட்டியுள்ளது.
இந்த இரண்டு சம்பவங்கள், இலங்கையில் ஊடக சுதந்திரத்திற்கு மாத்திரமல்லாது ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள ஆபத்தானது மேலும் கொடூரமான கட்டத்தை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறது என்ற சமிக்ஞையை வெளிப்படுத்தியுள்ளது.
ஜனநாயகம் மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கை சுதந்திரத்தை பாதுகாப்பதற்காக குரல் கொடுத்து வரும் சகல அரசியல் மற்றும் சிவில் அமைப்புகள் இந்த நிலைமை தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதை கடமையாக கருதுகின்றன.
அத்துடன் இது ஜனநாயக அரசுக்காக குரல் கொடுப்பதாக கூறும் அரசாங்கத்திற்கும் இது கடமையாகும் என்பதால், இவ்வாறான நிலைமைகள் தொடர்ந்தும் இடம்பெறாது என்பதை உறுதிப்படுத்துமாறு மீண்டும் மீண்டும் கோரிக்கை விடுக்கின்றோம் என சுதந்திர ஊடக இயக்கம் குறிப்பிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyFRdLZiw0.html

Geen opmerkingen:

Een reactie posten