மலேசியாவில் உள்ள ஈழ அகதிகள் அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மலேசிய காவற்துறை மா அதிபர் காலிட் அபுபக்கர் இதனைத் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் இயக்கத்தை மீளுருவாக்க முயற்சித்ததாக தெரிவித்து கடந்த வாரம் மூன்று ஈழத் தமிழர்களை கைது செய்யப்பட்டு, இலங்கைக்க நாடுகடத்தப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில் இந்த சோதனை நடவடிக்கை இடம்பெறவுள்ளது. மலேசியாவில் 4000க்கும் அதிகமான ஈழ அகதிகள் வசிக்கின்றனர். அவர்கள் நியாயமான அகதிகளா இல்லையா? என்பதை ஐக்கிய நாடுகளின் அகதிகள் பேரவை தீர்மானிக்கும். ஆனால் அவர்கள் அனைவரும் விரைவில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten