தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 28 mei 2014

கோத்தபாயவை குறுக்கு விசாரணை செய்த சுமந்திரன்!

பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறுக்கு விசாரணை செய்யும் வழக்கு ஒன்றுக்கு ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க மற்றும் லண்டே லீடர் பத்திரிகைக்கு எதிராக கோத்தபாய ராஜபக்ச தாக்கல் செய்திருந்த வழக்கு நேற்று தெஹிவளை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
மிக்27 கொள்வனவு தொடர்பில் சண்டே லீடர் பத்திரிகை வெளியிட்டிருந்த கட்டுரை ஒன்றுக்கு எதிராகவே இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இதற்கான ஆதாரங்களை கடந்த மே மாதம் 22ம் திகதி கோத்தபாய ராஜபக்சவினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்றைய தினம் இந்த வழக்கின் குறுக்கு விசாரணைகள் ஆரம்பமான போது கோத்தபாய ராஜபக்ச எம்.ஏ.சுமந்திரனால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
இதன்போது துரிதமாக செயற்பட்ட காவற்துறையினர் நீதிமன்றத்தில் இருந்த ஊடகவியலாளர்களை வெளியேற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு முன்னர் இந்த வழக்கு விசாரணை இடம்பெற்ற வேளையில் அதிக அளவில் ஊடகங்கள் இது குறித்த செய்திகளை வெளியிட ஊக்குவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyFRcLZir6.html

Geen opmerkingen:

Een reactie posten