தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 27 mei 2014

60 நாட்களில் சுமார் 77 புலிகள் உறுப்பினர்களை கைதுசெய்துள்ள புலனாய்வுப் பிரிவு !

விடுதலை புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைது !
27 May, 2014 by admin
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புலனாய்வு பிரிவை சேர்ந்த முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என அறியப்படுகிறது.பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இந்த சந்தேகநபர் கிளிநொச்சியில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண குறிப்பிட்டார்.

சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்புக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.சந்தேகநபர் வவுனியா வைத்தியசாலையில் கடந்த இரண்டாயிரத்து ஆறாம் ஆண்டு தொடக்கம் இரண்டாயிரத்து எட்டாம் ஆண்டு வரை சேவையாற்றியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.யுத்தம் நிறைவடைந்ததன் பின்னரும், விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள் உருவாக்கும் முயற்சியில் இந்த சந்தேகநபர் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதுவரையான காலப்பகுதியில், பயங்கரவாத நடவடிக்கைளுக்கு புத்துயிரளிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டதாக கருதப்படும் சுமார் 50 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6891
60 நாட்களில் சுமார் 77 புலிகள் உறுப்பினர்களை கைதுசெய்துள்ள புலனாய்வுப் பிரிவு !
27 May, 2014 by admin
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீளுருவாக்கம் பெறுவதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணை நடவடிக்கைகளில் இதுவரை 77 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண இன்று(27)தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் 6ம் திகதி தொடக்கம் இதுவரையான காலத்தில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதில் 47 சந்தேகநபர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார். 

அதில் 6 பெண்களும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டார். இதேவேளை கைதான 77 பேரில் 47 பேர் மீதே விசாரணைகள் நடத்தப்பட்டு வருகிறது. மீதம் உள்ள நபர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக அவர் எதனையும் தெரிவிக்கவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6892

Geen opmerkingen:

Een reactie posten