[ வியாழக்கிழமை, 29 மே 2014, 08:43.30 AM GMT ]
நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற போது அனைத்து சார்க் நாடுகளின் தலைவர்களையும் அழைத்திருந்தார். இதில் இலங்கை அதிபர் ராஜபக்சவும் இந்தியாவுக்கு வருகை தந்திருந்தார்.
மலேசிய பயங்கரவாத தடுப்பு பிரிவினால் கைது செய்யப்பட்டு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்ட குசாந்தன் மாஸ்டர் என்பவர், புலிகளின் விமானப் படையின் நிறுவனரான சங்கரின் மைத்துனர் என புலனாய்வு பிரிவினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
அவருடன் நேற்று முன்தினம் 20 நிமிட நேரம் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் ஈழத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வாக இலங்கை அரசு விரும்பாத 13வது அரசியல் சாசன திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட விஷயங்களை 'கறாராக' பிரதமர் மோடி வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
அத்துடன், தமிழர் தாயகப் பிரதேசத்தில் இலங்கை இராணுவத்தினர் நில அபகரிப்பில் ஈடுபடக் கூடாது, தமிழர் தாயகப் பகுதியில் இருக்கும் இராணுவத்தினரை விரைவில் வெளியேற்றிவிட்டு போலீசாரிடம் நிர்வாகத்தை ஒப்படைக்க வேண்டும், போலீஸ் அதிகாரங்களை கட்டுப்பட்டுத்தும் உரிமையை மாகாண சபையிடம் கொடுக்க வேண்டும், இந்தியாவுக்கு உறுதியளிக்கப்பட்டபடி தமிழர் பிரச்சினைக்கு 13வது அரசியல் சாசன திருத்தம் மற்றும் அதற்கு அப்பால் சென்று அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கையை தாமதிக்காமல் செயல்படுத்த வேண்டும் என்பதை "கறாரான" குரலில் ராஜபக்சவிடம் பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.
பிரதமர் மோடியின் இந்த "கறார்" குரலை ராஜபக்ச எதிர்பார்க்கவில்லை என்பதால் இறுக்கத்துடனேயே அவரும் பேசியிருக்கிறார்.
மேலும் பிரதமர் மோடியின் கருத்துகளுக்கு பதிலளித்த ராஜபக்சவோ, இப்பொழுதுதானே யுத்தம் முடிந்துள்ளது.. சிறிது காலம் எடுக்கும் என்று பதிலளித்திருக்கிறார்.
அப்போது இடைமறித்த பிரதமர் மோடி, யுத்தம் முடிந்து 5 ஆண்டுகள் ஓடிவிட்டன. இனியும் தாமதிக்காமல் நடைமுறைப்படுத்துங்கள். இதில் உங்களுக்கு பிரச்சினை எனில் இந்தியா நேரடியாக தலையிட்டு உதவும் என்றும் பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.
மேலும் வெளியுறவுத் துறை செயலர் சுஜாதா சிங்கிடம், முன்பு இலங்கைத் தரப்பில் நமக்கு என்ன உறுதிமொழி தரப்பட்டது? என்று கேட்க, 13வது அரசியல் சாசன திருத்தத்துக்கும் அப்பால் சென்று அதிகாரப் பகிர்வு அளிப்பதாக உறுதியளிக்கப்பட்டிருக்கிறது என்றாராம்.
இதை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, நீங்கள் அளித்த உறுதிமொழியைத்தான் நிறைவேற்ற சொல்லுகிறோம்.. தாமதிக்க வேண்டாம் என்று சொல்ல இலங்கை அதிபர் ராஜபக்சவின் முகத்தில் அதிர்ச்சிதான் வெளிப்பட்டதாம்.
கடந்த 30 ஆண்டுகாலம் இந்தியாவில் நிலையற்ற அரசு, உறுதியான வெளியுறவுக் கொள்கை எதுவும் இல்லாத நிலையில் இலங்கை தன் இஷ்டத்துக்கு செயல்பட்டு வந்தது, இந்தியாவை மதிப்பதாக இல்லாமல் இந்தியாவுடன் கண்ணாமூச்சி காட்டிக் கொண்டிருந்தது. ஆனால் மோடியின் இந்த கறார் பேச்சுவார்த்தையில் பொறி கலங்கினாராம் மகிந்த ராஜபக்ச. இந்திரா காந்தி அம்மையார் காலத்தில்தான் இந்தியா இப்படி கண்டிப்புடன் நடந்து கொண்டது என்பதையும் தமது சக அதிகாரிகளிடம் சொல்லியிருக்கிறார் ராஜபக்ச.
அத்துடன் இலங்கை அரசு ஊடகங்களில் பிரதமர் மோடி 13வது அரசியல் சாசன திருத்தம் பற்றியும் அதிகாரப் பகிர்வு பற்றியும் பேசியது குறித்து எந்த ஒரு பதிவையும் வெளியிடாமல் அதாவது தாம் மூக்குடைபட்டது தெரியாமல் மறைத்து இருக்கிறார் ராஜபக்ச என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.
மலேசியாவில் கைதானவர்களில் ஒருவர் புலிகளின் விமானப் படையின் நிறுவனரான சங்கரின் மைத்துனர்.
[ வியாழக்கிழமை, 29 மே 2014, 07:44.15 AM GMT ]
குசாந்தன் மாஸ்டர், புலிகள் அமைப்புக்கு சொந்தமான விமானங்களை பயன்படுத்தி கொழும்பு, அனுராதபுரம் உள்ளிட்ட பிரதேசங்களில் விமான தாக்குதல்களை நடத்த நேரடியான பங்களிப்பை வழங்கியவர் என தெரியவந்துள்ளது.
பொறியிலாளரான அவர், புலிகளின் விமானப்படையில் பயன்படுத்தப்பட்ட ஸ்லின் ரக விமானங்களை தாக்குதல் விமானங்களாக மாற்றும் பணிகளிலும் சிறிய ஹெலிக்கொப்டர்களை வடிவமைத்து அவற்றை பரீட்சித்து பார்க்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டமைக்கான தெளிவான சாட்சியங்கள் இருப்பதாக இராணுவப் புலனாய்வு பிரிவின் விசாரணை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
புலிகளின் விமானப் படைக்குரிய மிகவும் ரகசியமான ஆவணங்களும் புகைப்படங்களும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரிடம் உள்ளன.
இந்த சாட்சியங்கள் குசாந்தன் மாஸ்டர் புலிகள் அமைப்பின் முக்கியமான உறுப்பினர் என்பதை உறுதிப்படுத்துவதாக இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குசாந்தன் என்ற இந்த புலிகளின் விமானப்படை பிரதானி 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்டப் போரின் போது மலேசியாவிற்கு தப்பிச் சென்றவர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
விடுதலைப் புலிகள் அமைப்பில் குசாந்தன், குசாந்தன் மாஸ்டர் என அழைக்கப்பட்டார். எனினும் அவரது உண்மையான பெயர் சந்திரலிங்கம் குசாந்தன் எனவும் முல்லைச் செல்வம் என்ற பெயரிலும் அவர் அழைக்கப்பட்டதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
மலேசியாவில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ள குசாந்தன் உட்பட மூன்று புலிகளின் உறுப்பினர்களிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
Geen opmerkingen:
Een reactie posten