[ திங்கட்கிழமை, 26 மே 2014, 03:20.21 PM GMT ]
அமரர் திருமதி சிவசுந்தரம் குணலட்சுமி அவர்களின் ஞாபகார்த்தமாக லண்டனைச் சேர்ந்த தவசீலன் என்பவரால் வழங்கப்பட்ட நிதியில் மூக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்வு நேற்று உடையார் கட்டு மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றது.
அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சிவசக்தி ஆனந்தன் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
போருக்கு முன்பும் போருக்கு பின்பும் இந்த மாவட்டத்தின் மருத்துவ சேவை என்பது பெரியதொரு சேவையாகவே பார்க்கப்படுகின்றது. இது போரால் பாதிப்படைந்த மாவட்டம். இவர்களுக்கான மருத்துவ சேவை என்பது மிக அவசியமானதே. அந்த காலத்தில் இந்த மக்களுக்காக பலர் மருத்துவ சேவையை ஆற்றியிருக்கின்றார்கள். அவர்களில் இன்றும் உங்களுக்காக மருத்துவ சேவையை நடத்தும் வைத்தியகலாநிதி சிவமோகனும் ஒருவர்.
அவருடைய சேவையும் மறக்க முடியாதது. அவரால் இன்று நடத்தப்படுகின்ற இவ் மருத்துவ முகாம் ஆனது கடந்த 18 ஆம் திகதி நடத்த ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
முள்ளியவாய்காலில் எமது மக்கள் கொத்து கொத்தாக இறந்த தினம் எனக் கூறி பாதுகாப்பு தரப்பால் அனுமதி மறுக்கப்பட்டது. இந்த மாவட்டத்தில் போராட்டத்தின் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். பலர் காயங்களுக்கு உள்ளார்னார்கள்.
இதனால், உங்களுக்கு கண்ணாடிகளை வழங்கி உறவுகள் நினைவாக ஆத்மாசாந்தி பிரார்த்தனையில் ஈடுபடலாம் எனக் கருதியிருந்தோம். அதற்கு இந்த அரசு அனுமதி தரவில்லை. இப்படிப்பட்ட அரசுடன் தான் நாம் வாழ்கின்றோம். இவர்களிடமே எமக்கான தீர்வைப் தரும்படி போராடி வருகின்றோம். இவர்கள் தீர்வைத் தருவார்கள் என்ற நம்பிக்கை இழந்ததாலேயே வெளிநாடுகளை நம்பியுள்ளோம்.
ஐ.நாவில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் படிப்படியாக அரசை நெருக்குகிறது. அண்மையில் இந்தியாவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக புதிய பிரதமராக பதவியேற்ற மோடியுடன் கூட்டமைப்பு பேச தயாராக இருக்கிறது.
இந்த அரசாங்கம் மன்மோகன் சிங் அவர்களை ஏமாற்றிய மாதிரி மோடியை ஏமாற்ற முடியாது. மோடிக்கு இந்த அரசாங்கம் வாக்குறுதியைக் கொடுத்து விட்டு மீறுவது என்பது நடைமுறைச் சாத்தியமானதில்லை.
அப்படி மீறினாலும் ஏமாறப்போவது இலங்கை அரசாங்கமே தவிர, மோடி இல்லை. எனவே மன்மோகன்சிங் அரசை மாதிரி மோடியை இந்த அரசு கருதிவிட முடியாது. நாமும் ஒன்று பட்டு இந்தியாவினதும் சர்வதேசத்தினதும் துணையுடன் எமக்கான தீர்வைப் பெற முயற்சிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
வடமாகாணசபை உறுப்பினரும் வன்னிக்கோ சுகாதார நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான வைத்தியகலாநிதி சி.சிவமோகன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், வடமாகாணசபை உறுப்பினர்களான வீ.கனகசுந்தரசுவாமி, மேரிகமலாகுணசீலன், புதுக்குடியிருப்பு கோட்டக் கல்வி அதிகாரி சு.சோதிநாதன், ஓய்வு பெற்ற பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான ச.நாகரத்தினம், பொ.பேரின்பநாயகம், உடையார் கட்டு மகாவித்தியாலய அதிபர் வி.சிறிதரன், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.பூங்கோதை, புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி ப.பரணீதரன், புதுக்குடியிருப்பு மாவட்ட வைத்திய அதிகாரி ப.சத்தியரூபன் மற்றும் மூக்குகண்ணாடி பெறும் பயனாளிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
http://www.tamilwin.com/show-RUmsyFRaLZjr1.html
மன்மோகன் சிங் பக்கத்தில் அமராமல் தவிர்த்த மகிந்த ராஜபக்ச
[ திங்கட்கிழமை, 26 மே 2014, 03:04.01 PM GMT ]
மோடியின் பதவியேற்பு வைபவத்தில் இராஜதந்திரிகள் வரிசையில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அமர்ந்திருந்தார்.
இந்த வைபவத்தில் பங்கேற்பதற்கு டில்லி சென்றிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் பக்கத்தில் உட்காராமல் பாஜக மூத்த தலைவரான அத்வானி அருகே அமர்ந்துகொண்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyFRaLZjr0.html
'மக்களைக் கொல்ல ஆணையிட்டவர்களுக்கு தூதரக பதவி'
[ திங்கட்கிழமை, 26 மே 2014, 03:00.42 PM GMT ] [ பி.பி.சி ]
தலைநகர் கொழும்புக்கு அருகே கம்பஹா மாட்டத்தில் வெலிவேரிய பிரதேசத்தில் சுத்தமான குடிநீர் கேட்டுப் போராட்டம் நடத்திய பொதுமக்களின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் இரண்டு பேரும், தடிகளால் கடுமையாகத் தாக்கியதில் இன்னொருவரும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் மேலும் 37 கிராமவாசிகளும் காயமடைந்தனர்.
இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய இராணுவ உயரதிகாரியான பிரிகேடியர் தேஷப்பிரிய குணவர்தன துருக்கிக்கான இலங்கைத் தூதரக பதவி ஒன்றுக்கு நியமிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளார்.
'எங்களைக் கொல்ல ஆணை வழங்கியவர்கள், தண்ணீர் கேட்ட எங்களைக் கொல்ல ஆணைவழங்கியவர்கள் இன்று பதவிகளை பெறுகின்றனர். தூதுவர்களாக நியமனம் பெறுகின்றனர்' என்று ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பிபிசியிடம் தெரிவித்தார்.
வெலிவேரிய சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை இதுவரை வெளியாகவில்லை என்பதை சுட்டிக்காட்டிய ரஞ்சன் ராமநாயக்க, வெலிவேரியவில் பலியான பொதுமக்கள் தம்மைத் தாமே சுட்டுக்கொண்டு பலியானார்கள் என்று அறிக்கை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் கூறினார்.
2012-ம் ஆண்டில், வெலிக்கடை சிறைச்சாலைக்குள் 27 கைதிகள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் அறிக்கை வெளியிட்ட அரசாங்கம், கைதிகள் தம்மைத் தாமே சுட்டுக் கொண்டதாக கூறியிருந்ததை ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நினைவுகூர்ந்தார்.
இறுதிக்கட்ட யுத்த திறமைகளுக்கான பரிசு
வெலிவேரிய சம்பவத்தின்போது இராணுவத்திற்கு ஆணை வழங்கிய பிரிகேடியர் தேஷப்பிரிய குணவர்தனவை, அவரது 142வது படையணியின் தளபதி பொறுப்பிலிருந்து இராணுவத் தலைமைப் பீடம் அண்மையில் நீக்கியிருந்தது.
எனினும் அந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் முடியமுன்னமே, அவரை வெளிநாட்டுத் தூதரக பதவிக்கு அரசாங்கம் நியமித்துள்ளமை பற்றி பிபிசி இலங்கை இராணுவப் பேச்சாளரிடம் கேள்வி எழுப்பியது.
வெலிவேரிய சம்பவம் தொடர்பில் இராணுவ நீதிமன்றம் நடத்திய ஆரம்பகட்ட விசாரணைகளுக்குப் பின்னர் நடந்த அடுத்த கட்ட விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலேயே பிரிகேடியர் தேஷப்பிரிய அவரது பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டிருந்ததாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடிய ருவன் வணிகசூரிய பிபிசியிடம் தெரிவித்தார்.
இறுதிக்கட்டப் போரின்போது பிரிகேடியர் தேஷப்பிரிய குணவர்தன வெளிப்படுத்திய திறமைகளுக்குப் பரிசாகவே அவருக்கு இந்த தூதரக பதவி அளிக்கப்பட்டுள்ளதாகவும் வெலிவேரிய சம்பவத்துடன் அதற்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை என்றும் ருவன் வணிகசூரிய கூறினார்.
இதேவேளை, இலங்கையின் இறுதிக்கட்டப் போரின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்களுடன் தொடர்புடைய இராணுவ உயர் அதிகாரிகளுக்கு வழக்கு நடவடிக்கைகளிலிருந்து பாதுகாப்பு அளிக்கும் முயற்சியாகவே அரசாங்கம் வெளிநாட்டு இராஜதந்திரப் பதவிகளை அளித்துவருவதாக சர்வதேச மனித உரிமை அமைப்புகள் ஏற்கனவே குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyFRaLZjrz.html
Geen opmerkingen:
Een reactie posten