தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 26 mei 2014

டெல்லியில் மகிந்தர் தரையிரங்கினார்! வைகோ கைது…

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இந்திய மண்ணில் கால் வைப்பதை எதிர்த்து, இன்று 29.5.2014 தலைநகர் டெல்லி, ஜந்தர் மந்தரில் நடைபெற்ற கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில், கழகப் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் ஏராளமான தொண்டர்கள் திரண்டு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் குதித்துள்ளனர்.

vaiko
டெல்லியில்…
இந்தியாவின் பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக இன்றுக்காலை புறப்பட்டு சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழு டெல்லியை சென்றடைந்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
இந்திய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவில் கலந்து கொள்ளவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் டெல்லியை சென்றடைந்துள்ளனர்.
டெல்லி விமான நிலையத்தில் வைத்து இலங்கைத் தூதரக அதிகாரிகளால் வரவேற்கப்பட்ட ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் அவர்களது தங்குமிடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஜனாதிபதியுடன் யாழ். மாநகரசபையின் மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா மத்திய மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் உட்பட அமைச்சர் சிலரும் பங்கேற்கின்றனர்.
இதேவேளை, ஜனாதிபதியின் இந்திய வருகையினை முன்னிட்டு, தமிழகத்திலும் டெல்லியிலும் எதிர்ப்பலைகள் கிளம்பியுள்ளதுடன், ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன.Maginta-01Mgintamodi-Indan-02modi-Indan-03
வைகோ கைது
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இந்திய விஜயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுடெல்லியில் கறுப்புக்கொடிப் போராட்டம் நடத்திய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ உட்பட அவரின் ஆதரவாளர்கள் சற்று முன்னர் டெல்லி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
டெல்லியில் இன்று நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்க உள்ள நிலையில், அங்கு எவ்வித ஆர்ப்பாட்டமோ, போராட்டமோ நடத்த அனுமதி இல்லை என்றும், அதையும் மீறி யாரேனும் போராட்டம் நடத்தினால் உடனடியாக அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று புதுடெல்லி பொலிஸார் ஏற்கெனவே அறிவித்திருந்தனர்.
நரேந்திர மோடி பதவியேற்பு விழாவுக்கு வரும் இலங்கை ஜனாதிபதிக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஜந்தர் மந்தரில் ம.தி.மு.க சார்பில் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக ம.தி.முக. அறிவித்திருந்த நிலையில் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே, அப்பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்திய வைகோவும் அவரது ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டு செய்து வேனில் ஏற்றிச்செல்லப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
http://www.jvpnews.com/srilanka/70580.html

Geen opmerkingen:

Een reactie posten