தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 29 mei 2014

பாப்பரசரின் இலங்கை விஜயம் போர்க்குற்றவாளிகளை பாதுகாக்கும்!- இலங்கைக்கு விஜயம் செய்ய வேண்டாம் என கோரிக்கை


மோடியுடனான சந்திப்பு மகிந்தவின் உறுதிமொழிகளை நினைவுபடுத்தி இருக்கும்!- கேர்ணல் ஹரிஹரன்
[ புதன்கிழமை, 28 மே 2014, 11:48.10 PM GMT ]
இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் கடந்த செவ்வாய்க்கிழமை சந்தித்துக் கொண்டிருந்தனர்.
இதன் போது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவின் விரிவாக்கம் தொடர்பில் முக்கியத்துவம் வழங்கி பேசப்பட்டது.
அதேநேரம் இலங்கையில் நல்லிணக்கத்தையும்,  சமாதானத்தையும் ஏற்படுத்துவதற்காக,  இலங்கை அரசாங்கம் துரிதமாக செயற்பட வேண்டும் என்பதை நரேந்திர மோடி மகிந்த ராஜபக்சவுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன் காணி மற்றும் காவற்துறை அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்க வேண்டும் என்பதையும்,  13ம் திருத்தச் சட்டத்தின் முழுமையான அமுலாக்கத்தையும் அவர் வலியுறுத்தி இருக்கிறார்.
இது இந்தியாவின் முன்னாள் காங்கிரஸ் அரசாங்கத்திடம் மகிந்த ராஜபக்ச வழங்கியிருந்த உறுதிமொழிகளை நினைவுபடுத்தி இருக்கும் என்று கேர்ணல் ஹரிஹரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் தாம் தமது உறுதிமொழிகளில் இருந்து தப்ப முடியாது என்பதையும் மகிந்த ராஜபக்ச புரிந்து கொண்டிருக்க வேண்டும் என்பதையும் அவர் தெரிவித்துள்ளார்.
பாப்பரசரின் இலங்கை விஜயம் போர்க்குற்றவாளிகளை பாதுகாக்கும்!- இலங்கைக்கு விஜயம் செய்ய வேண்டாம் என கோரிக்கை
[ புதன்கிழமை, 28 மே 2014, 11:38.32 PM GMT ]
பாப்பரசர் பிரான்ஸிஸ் இலங்கைக்கு விஜயம் செய்வாராக இருந்தால், இலங்கைக்கு எதிரான சர்வதேச யுத்தக்குற்ற விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஆங்கில ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.
அடுத்த வருடம் ஜனவரி மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளமையை, பாப்பரசர் நேற்று முன்தினம் உறுதிபடுத்தியிருந்தார்.
அவர் இலங்கைக்கு விஜயம் செய்வதானது, இலங்கையின் போர்க்குற்றங்களை ஆசீர்வதிப்பதை போன்றது.
இந்த விஜயத்தை வைத்து இலங்கை அரசாங்கம் தம்மீதான யுத்தக் குற்றங்களில் இருந்து தப்பித்துக் கொள்ள முயற்சிகளை மேற்கொள்ளும் என்ற அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கைக்கு விஜயம் செய்ய வேண்டாம் என பாப்பரசரிடம் கோரிக்கை
இலங்கைக்கு விஜயம் செய்ய வேண்டாம் என பாப்பரசரிடம் கோரிக்கை விடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு அமைப்புக்கள் இவ்வாறு பாப்பரசரிடம் கோரிக்கை விடுக்க உள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பாப்பரசர் பிரான்சிஸின் இலங்கை விஜயத்தை சீர்குலைக்கும் நோக்கில் போலியான தகவல்கள் உள்ளடங்கிய மகஜர் ஒன்றை புலம்பெயர் புலி ஆதரவாளர்கள் அனுப்பி வைக்கவுள்ளனர்.
பாப்பரசர் எதிர்வரும் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக ஊடகங்களி;ல் தகவல் வெளியிடப்பட்டுளளது.
இலங்கைத் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதாக பிரான்ஸ் முழுவதும் பிரசாரம் செய்வதற்கான நடவடிக்கைளை புலி ஆதரவாளர்கள் எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Geen opmerkingen:

Een reactie posten