அப்பனுக்கு உதவியதாக தபால் ஊழியர் ஒருவரை புலனாய்வுப் பிரிவு கைதுசெய்துள்ளது !
02 May, 2014 by admin
புலிகள் இயக்கத்துக்கு மீண்டும் உயிர்கொடுக்கும் நோக்கில் செயற்படுவதாக பொய்யாகக்கூறி, நெடுங்கேணியில் வைத்து அப்பன், தெய்வீகன் மற்றும் கோபி ஆகியோரை இலங்கை இராணுவம் சுட்டுக்கொன்றது. ஏற்கனவே அவர்கள் வசம் சிக்கியிருந்த இம்மூவரையும் இலங்கை இராணுவம் சூடுக்கொன்றது ஒருபுறம் இருக்க, இவர்களோடு தொடர்பில் இருந்தார்கள் என்று பொய்குற்றச்சாட்டுகளை தெரிவித்து மேலும் பலரை இலங்கை இராணுவம் தற்போது கைதுசெய்து வருகிறது. அவ்வாறு தபால் ஊழியர் ஒருவரையும் இலங்கை இராணுவம் கைதுசெய்துள்ளது என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.
மேற்படி அப்பன் என்றழைக்கப்படும் நவநீதனுக்கு உதவியதாகக் கூறியே அனுராதபுரத்தில் தங்கியிருந்த குறிப்பிட்ட தபால் ஊழியரை இலங்கை இராணுவம் கைதுசெய்துள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
மேற்படி அப்பன் என்றழைக்கப்படும் நவநீதனுக்கு உதவியதாகக் கூறியே அனுராதபுரத்தில் தங்கியிருந்த குறிப்பிட்ட தபால் ஊழியரை இலங்கை இராணுவம் கைதுசெய்துள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6776
டோச்-லைட்டுக்குள் குண்டு: வெடித்ததில் அப்பா - மகன் காயம் !
02 May, 2014 by admin
பலாங்கொடையிலுள்ள வீடொன்றில் இன்று காலை மின்சூள்ழொன்று(டோச் -லைட்) வெடித்ததில் மூவர் காயமடைந்துள்ளனர். மின்சூளை ஒளிரச் செய்ய முற்பட்டபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவித்தார். வீட்டு முற்றத்தில் காணப்பட்ட மின்குமிழொன்றை அவதானித்த 14 வயது பிள்ளையொன்று, அதனை கையிலெடுத்து தனது தந்தையிடம் ஒப்படைத்துள்ளது.
இதனையடுத்து தந்தை மின்சூளை ஒளிரச் செய்ய முற்பட்டபோது அது வெடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தார். இதன்போது தந்தை, 24 வயதான மகள் மற்றும் மகன் ஆகியோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக இரத்தினபுரி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்த மின்சூளின் சுவிச்சை ஆன் செய்யும்போது அது வெடிக்கும் வகையில் யாரோ அதனை தயாரித்து, குறித்த அந்த வீட்டின் முற்றத்தில் போட்டுள்ளார்கள் என்று மேலும் அறியப்படுகிறது.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6777
Geen opmerkingen:
Een reactie posten