வடக்கே வாழும் தமிழர்கள் புலிகள் என கூறுகிறான் சிங்கள மந்திரி குணதாச, வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் அனைவருமே பயங்கரவாதிகள் என்கிறது ராஜபக்ச தலமையிலான சிந்தையில்லா சிங்கள அரசு.
புத்த பிக்குகள் தொடக்கம் சிங்களத் தலமை வரை, தமது தேவையின் நிமிர்த்தம், தமிழர்கள் அனைவரையும் பயங்கரவாதிகளாக வர்ணிக்கும்போது, எழுத்தால்கூட சித்தரிக்க முடியாத, அந்தக் கொடிய நாட்களை நினைவுகூர தமிழினம் தயாராகி வருவது நிச்சயம் வரவேற்கத்தக்கது.
தமிழர் அனைவரும் பாகுபாடற்று பங்குகொள்ள வேண்டிய ஓர் நிகழ்வல்லவா?
இந்த நிகழ்வு பிரிவினையில்லா தமிழினத்தின் ஒரே குரலில், மாற்றாரும் பார்த்து வியக்கும் விதத்தில், உலகெலாம் ஒலிக்க வேண்டும். இதுவே உலகத் தமிழினத்தின் ஆசை, விருப்பம்.
புலம்பெயர் நாட்டில் இயங்கும் அணிகள் யாவும், இந்தச் சூழலிலாவது, தமிழினத்தின் நன்மை கருதி எம்மவர் விருப்பை பூர்த்தி செய்ய முன்வர வேண்டும். தமிழ் இனத்தை அழிக்க எந்தவித பேதமுமின்றி சிங்கள தேசம் வரிந்துகட்டி நிற்கையில், எம்மினத்தை காக்க நாம் ஏன் ஒன்றுசேரக் கூடாது.
தர்மத்தை மதித்து, உண்மை வழியில் பயணிக்கும் நாம், எமக்குக் கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் பயன் தரும் விதத்தில் செயற்படுத்த வேண்டும்.
இந்த நிகழ்வும் உலகின் கண்களை ஈர்க்கவேண்டுமானால், இருபத்தி ஐந்து ஆண்டுகளாக மாவீரர் தினத்தையும், கறுப்பு ஜூலை போன்ற பல நிகழ்வுகளையும் உலகளாவிய ரீதியிலே சிறப்பாகச் செய்துவரும் அமைப்பினர் தலமையில், மற்ற அணிகளின் பங்களிப்புடன் இந்த மே 18 நிகழ்வை செய்வதே மேல். இந்நிகழ்வை சீராகச் செய்வதற்கான அறிவும், ஆற்றலும், அனுபவமும் ஆள்பலனும் அவர்களிடம்தானே இருக்கிறது.
அதுமத்திரமல்ல, இதுபோன்ற நிகழ்வுகளை தப்பே இல்லாது நிறைவு செய்யும் திறனும் இந்த அமைப்புக்கு உண்டு. கனடா நாட்டில், 2012ம் ஆண்டிற்கான மே18 நிகழ்வை, பிரிந்துசென்று குயீன்ஸ் பார்க்கில் நடாத்திய அணியினர் செய்ததப்புக்களில் ஒன்றே, போரினால் இறந்த அனைவருக்குமான அகவணக்கம் போர்க் குற்றவிசாரணையை அர்த்தமற்றதாக்கும் இந்த அகவணக்கம், எம் மானம்காத்த மறவர்களையும் சிங்களப் அரச படையினரையும் சமனாக்கி, எம்மையும். எமது மாவீரர்களையும் அவமதித்ததை யாரால் ஏற்கமுடியும்.
நாம் தப்புச் செய்தவர்களல்ல தண்டனையை அனுபவிக்க. நாளுக்கு நாள் எமது தேசத்தையும், உறவுகளையும் வேகமாக இழந்துவரும் இந்த வேளையிலும் இணைந்து செயற்பட மறுக்கும் அணிகளையும் அதன் தலமைகளையும் பார்ப்பதற்கு துரோகிகளாக தோன்றினாலும், அவர்களின் நோக்கத்தையும் பின்னணியையும் நன்கு ஆராய்ந்து ஓர் முடிவுக்கு வருவதே சாலச்சிறந்தது. தவறு செய்தவன் திருந்தப் பார்கணும், தப்பு செய்தவன் தண்டிக்கப்பட வேண்டும். இதுதானே நீதி, இவைதானே நியதி.
பிரிவினையை உருவாக்கி, சிங்கள அரசின் விருப்பை பூர்த்தி செய்யும் அணிகளையும், சிங்கள அரசு செய்த அநீதிகளிலிருந்து அவர்களை தப்பவைக்க எமது அரசியலுக்குள் நுழைந்தவர்களையும் களையும் காலம் வந்துவிட்டது. தீர்ப்பை வழங்கும் பாரிய பொறுப்பை, நீதிக்காகப் போராடுவதை வாழ்க்கையாகக் கொண்ட, உங்களிடம் விடுவதுதானே முறை.
நன்றி.
கலாநிதி இராம் சிவலிங்கம்
sivalingham@sympatico.ca
http://www.tamilwin.com/show-RUmsyFTWLYmq0.html

Geen opmerkingen:
Een reactie posten