தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 2 mei 2014

முக்கியமான இணைய தளங்கள் ஹெக் செய்பய்பட்டுள்ளன என் அறியப்படுகிறது !

ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் விமானத்தில் குண்டு புரளி: 3 வருடம் சிறைத் தண்டனை !
02 May, 2014 by admin
கடந்த வருடம் செப்டெம்பர் மாதம், ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் விமானத்தில் தாம் குண்டு ஒன்றை வைத்திருந்ததாக ஆங்கிலேயர் ஒருவர் புரளியைக் கிளப்பினார். இதுதொடர்பான செய்திகள் ஏற்கனவே மீடியாக்களில் வெளியாகி இருந்தது. லண்டனில் உள்ள ஹீத்ரோவ் விமானநிலையம் நோக்கிப் பறந்த இந்த விமானம், இவர் கிளப்பிய புரளியால் ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதேவேளை பிரித்தானிய பாதுகாப்பு படையினர், இந்த ஸ்ரீலங்கன் விமானத்தை , இடை நிறுத்த தமது போர் விமனத்தைவேறு அனுப்பிவைத்தார்கள். இவை அனைத்துக்கும் காரணம் , அலன் பெட்டிலி என்னும் 49 வயது நபர் தான்.

நேற்றைய தினம் நடைபெற்ற இந்த வழக்கில், நீதிபதி இறுதியாக தனது தீர்ப்பை வழங்கியுள்ளார். அதில் அவர் அலன் பெட்டிலிக்கு 3 வருட சிறைத்தண்டனை வழங்கியுள்ளார் என மேலும் அறியப்படுகிறது.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6774
முக்கியமான இணைய தளங்கள் ஹெக் செய்பய்பட்டுள்ளன என் அறியப்படுகிறது !
02 May, 2014 by admin
நாட்டின் முக்கியமான இணைய தளங்கள் பல ஹெக் செய்யப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. தமிழ் சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் சுமார் 129 இணைய தளங்கள் இவ்வாறு ஹெக் செய்யப்பட்டுள்ளன.

மத்திய வங்கி, ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம், இலங்கை துறைமுக அதிகாரசபை உள்ளிட்ட முக்கிய இணைய தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. சில இணைய தளங்களிலிருந்து தகவல்கள் களவாடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6775

Geen opmerkingen:

Een reactie posten