புலம்பெயர் நாடுகளில் உள்ள மற்றும் இலங்கையால் தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் செயல்பாடுகளை, கண்காணிக்க 18 சிங்கள புலனாய்வாளர்கள் வெளிநாட்டுக்கு அனுப்பப்படுள்ளார்கள் என்று ஒரு செய்தியை சிங்கள இணையம் ஒன்று கடந்த 2 நாட்களுக்கு முன்னர் வெளியிட்டது. சிங்கள டெய்லி என்னும் இந்த இணையம், வெளியிட்ட செய்தியில் 18 சிங்கள புலனாய்வுப் பிரிவினர் தடைசெய்யப்பட்ட அமைப்புகளை கண்காணிக்க 18 வெளிநாடுகளுக்கு சென்றுள்ளார்கள் என்று பாதுகாப்பு அமைச்சை உதாரணம் காட்டி செய்தி ஒன்றை வெளியிட்டது.
நேற்றைய தினம் பாதுகாப்பு அமைசில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில், சில ஊடகவியலாளர்கள் இச்செய்தி தொடர்பாக கேள்விகளை எழுப்பியுள்ளார்கள். இதற்கு பதிலளித்த பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள், இதனை முற்றாக மறுத்துள்ளார்கள். தாம் எந்த ஒரு புலனாய்வு அதிகாரியையும் வெளிநாட்டுக்கு அனுப்பிவைக்கவில்லை, என்று அவர்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளார்கள் என்று அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6772
Geen opmerkingen:
Een reactie posten