தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 1 mei 2014

தனியார் நிறுவனம் ஒன்றின் நிகழ்ச்சிக்காக யாழ் நகரில் மூடப்பட்ட வீதிகள் !


கொழும்பை மையாகக் கொண்ட பல்தேசிய கம்பனி ஒன்றின் விளம்பர நிகழ்ச்சிக்காக மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், யாழ் நகரின் பிரதான வீதிகள் மூடப்பட்டதாக மக்கள் முறையிட்டுள்ளனர்.
இதனால் யாழ்ப்பாணத்தை சேர்ந்த வர்த்தகர்களின்; வியாபார நடவடிக்கைகள் கூட நேற்று புதன்கிழமை முழுநாளும் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இருந்து யாழ் நகருக்கு வரும் பிரதான வீதியில் முனியப்பர் கோயிலுக்கு முன்பாக மோட்டார் சைக்கிள் நிறுவனம் ஒன்றின் விளம்பர சாகச நிகழ்ச்சி இடம்பெற்றதாக மக்கள் தெரிவித்தனர்.

பெருமளவு பொலிஸாரும் காவல் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு குறித்த அந்த தனியார், நிறுவனத்தின் நிகழ்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்கியதாக மக்கள் தெரிவித்தனர். பிரதான வீதிகளுக்கு குறுக்கே வாகனங்கள் நிறுத்தப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டது என்றும் இதனால் அன்றாட நடவடிக்கைகளுக்காக நகருக்கு சென்ற மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியதாகவும் கூறப்படுகின்றது.

கலாச்சாரங்களை சீரழிக்கும் களியாட்ட மற்றும் சாகச நிகழ்ச்சிகளுக்கு சிலதரப்பு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் இதனால் மாணவர்கள் சிறுவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் பெற்றோர் கவலை வெளியிட்டுள்ளனர்.




http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6766

Geen opmerkingen:

Een reactie posten