சென்னையில் கியூ பிரிவால் கைதுசெய்யப்பட்ட இலங்கை குடியுரிமை பெற்ற நபர், ஒரு பாக்கிஸ்தான் உளவாளி என்பது தற்போது நிரூபனமாகியுள்ளது. இன் நிலையில் அவர் பெயர் மொகமெட் சாகீர் என்று கியூ பிரிவு பொலிசார் தெரிவித்துள்ளார்கள். அவரிடம் சென்னையில் உள்ள அமெரிக்க தூதுவராலயத்தின் படங்கள் உட்பட பல, வெளிநாட்டு தூதரங்களின் படங்கள் இருந்ததாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளார்கள். இலங்கையில் பிறந்த மொகமெட் சாகீர் தமிழ் பேசும் ஒரு முஸ்லீம் என்று தெரிவித்துள்ள கியூ பிரிவு பொலிசார், இவர் பாக்கிஸ்தானின் உளவுப் பிரிவில் சில வருடங்களுக்கு முன்னர் இணைந்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
இவர் தென்னிந்தியாவில் பயங்கரவாத தாக்குதல் பலவற்றை நடத்த ஏதுவாக, திட்டங்களை தீட்டிக்கொடுத்துள்ளார். அதற்கான ஆயத்தங்களையும் திட்டங்களையும் வகுத்துள்ளார். இன் நிலையிலேயே அவரை தமிழக கியூ பிரிவினர் கைதுசெய்துள்ளார்கள். இவை எல்லாம் ஒருபுறம் இருக்க, இலங்கையில் உள்ள பாக்கிஸ்தான் தூதுவராலயத்தில் உள்ள பலர் சாகீர் தொடர்பில் இருந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6765
Geen opmerkingen:
Een reactie posten