தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 1 mei 2014

கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தில் இப்படி தான் பீலா காட்டுகிறார்கள் !

தமிழீழ விடுதலைப்புலிகள் யுத்த காலத்தில் பயன்படுத்தியவை என ஒரு தொகுதி வெடி பொருட்கள் கிளிநொச்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற இக் காட்சிப்படுத்தலில் கிளிநொச்சி பிராந்திய மாணவர்கள் பலரும் கலந்துகொண்டு பார்வையிட்டிருந்தனர். புலிகளை ஏதோ பயங்கரவாதிகள் போல இளம் மாணவர்களிடையே சித்தரிக்கவே இக் கண்காட்சி நடைபெற்று என்று பொதுமக்கள் மேலும் தெரிவித்துள்ளார்கள். 

விடுதலைப்புலிகளால் பயன்படுத்தப்பட்டதாக கூறி, கண்ணிவெடிகள்- மிதிவெடிகள் மற்றும் அபாயகரமான வெடிபொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்த அதேவேளை அவற்றை மீட்பதற்கு இராணுவத்தினர் பயன்படுத்திய உபகரணங்களையும் காட்சிப்படுத்தியிருந்தனர். இவை தொடர்பான விளக்கங்களை இராணுவத்தினர் மாணவர்களுக்கு விளக்கிக் கூறியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். கண்காட்சியில் கிளிநொச்சி பிராந்திய கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சுசந்த ரணசிங்க உட்பட இராணுவ அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6767

Geen opmerkingen:

Een reactie posten