தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 10 mei 2014

சீனாவுக்கு எதிரான இலங்கைப் பிரதமரின் கருத்து (படம் இணைப்பு)

பல்கலைக்கலகங்களுக்கு காத்திருக்கும் மாணவர்கள் கவனத்துக்கு
2013 - 2014ஆம் கல்வி ஆண்டுக்காக பல்கலைக்கலகங்களுக்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான விண்ணப்பங்கள் தற்போது விநியோகிக்கப்பட்டுள்ளன.

இவ் விண்ணப்ப பத்திரங்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் நாடு முழுவதிலுமுள்ள புத்தக கடைகளில் பெற்றுக் கொள்ள முடியும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை எதிர்வரும் 19ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக பதிவுத் தபாலில் அல்லது நேரடியாக பல்கலைக்கழக மானிங்கள் ஆணைக்குழுவிற்கு கிடைக்குமாறு அனுப்பி வைக்குமாறு அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை பல்கலைக்கழக நுழைவுக்காக செயன்முறை தேர்வு எழுத வேண்டிய மாணவர்கள் அது குறித்து பத்திரிக்கைகளில் வெளியிடப்படும் அறிவித்தல்கள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
10 May 2014

சீனாவுக்கு எதிரான இலங்கைப் பிரதமரின் கருத்து (படம் இணைப்பு)

வெசக் நிகழ்வில் கலந்துக் கொள்வதற்காக வியட்னாம் சென்றிருந்த இலங்கையின் பிரதமர் டி.எம்.ஜெயரத்ன மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

ஏற்கனவே அவர் இலங்கையில் பல்வேறு முரண்பட்ட கருத்துக்களை வெளியிட்டு, இலங்கை அரசாங்கத்தை தர்மசங்கடத்தில் ஆழ்த்தி இருந்தார்.
இந்த நிலையில் வியடனாம் சென்றிருந்த அவர், சீனாவுக்கு எதிரான கருத்தை வெளியிட்டு, மீண்டும் பிரச்சினையை ஏற்படுத்தி இருந்த நிலையில், வெளிவிவகார அமைச்சு உடனடியாக இந்த விடயத்தில் தலையிட்டு பிரச்சினையை தீர்க்க முற்பட்டுள்ளது.

தென்சீனக்கடலில் உள்ள சர்ச்சைக்குறிய தீவுப் பகுதியில் இருந்து சீனா விலக வேண்டும் என்றும், அந்த தீர்வுப் பகுதி வியட்னாமிற்கு உரியது என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இது சீனாவை ஆத்திரமடையச் செய்யும் என்பதுடன், சீனாவுடன் நெருங்கிய தொடர்பினை கொண்டுள்ள இலங்கை அரசாங்கத்தின் உறவிலும் பாதிப்பு எற்படும் வகையில் அமைந்திருந்தது.

இந்த நிலையில் இலங்கை வெளிவிவகார அமைச்சு உடனடியாக தலையிட்டு, அவர் இவ்வாறான கருத்து எதனையும் வெளியிடவில்லை என்றும், ஊடகங்கள் அவர் வெளியிட்ட கருத்தை திரிபு படுத்தி இருப்பதாகவும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
10 May 2014
http://www.lankaroad.net/index.php?subaction=showfull&id=1399729787&archive=&start_from=&ucat=1&

Geen opmerkingen:

Een reactie posten