தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 10 mei 2014

ஊடகங்களை இலங்கை தண்டிக்கக்கூடாது! உதவிச்செயலர் டோக் பிரான்ட்ஸ்.!!

சிறிலங்காவில் தொடரும்வன்முறை: முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் - 


சிறிலங்காவில் தொடரும், வன்முறைகளின் ஒருகட்டமாக, அளுத்கம நகரில் உள்ள முஸ்லிம் வர்த்தகரின் வணிக நிலையம் ஒன்று பௌத்த பிக்குகள் தலைமையிலான சிங்கள பௌத்த குண்டர்களால் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது.
மூன்று பௌத்த பிக்குகள் தலைமையில் சென்ற சுமார் 250 பேர், இந்த வர்த்தக நிலையத்துக்கு தீவைத்து எரித்துள்ளனர். இதனால் இரண்டு மாடி வர்த்தக நிலையம் முற்றாக எரிந்து நாசமானது.
இந்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளரின் சகோதரரால், சிறுவன் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாக குற்றம்சாட்டியே பௌத்த அடிப்படைவாதிகளால் இந்த வர்த்தக நிலையத்துக்குத் தீவைக்கப்பட்டுள்ளது.
இது தமக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சதி என்று வர்த்தக நிலையத்தின் உரிமையாளராக, மொகமட் நயீம்கான் தெரிவித்துள்ளார். சிறுவர் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டில் தமது சகோதரர் கைது செய்யப்பட்டு, வர்த்தக நிலையத்துக்குள் எடுக்கப்பட்ட எல்லா காணொலிப் பதிவுகளும் ஆராயப்பட்ட பின்னர் அவர் நீதிமன்றால் பிணையில் விடுவிக்கப்பட்டு விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
விகாரை ஒன்றில் கலந்துரையாடப்பட்ட பின்னரே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து சிறிலங்கா காவல்துறைக்கு தெரியப்படுத்தப்பட்டு, அதற்கு பாதுகாப்பு வழங்குமாறு அவர்கள் கேட்கப்பட்டதாக தாம் அறிந்ததாகவும் மொகமட் நயீம்கான் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் மாலையே வர்த்தக நிலையத்துக்குத் தீவைக்க முடிவு செய்யப்பட்டிருந்ததாகவும், ஆனால், நேற்று அதிகாலையிலேயே தீவைப்பு இடம்பெற்றதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை, இந்த தாக்குதலைக் கண்டித்து தர்கா நகரில் நேற்று முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமை மதியத் தொழுகைக்குப் பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- See more at: http://www.canadamirror.com/canada/25805.html#sthash.LGknZrZY.dpuf

ஊடகங்களை இலங்கை தண்டிக்கக்கூடாது! உதவிச்செயலர் டோக் பிரான்ட்ஸ். 

ஊடகங்கள் மேற்கொள்ளும் பணிக்காக, சிறிலங்கா அரசாங்கம் அவற்றைத் தண்டிக்கக் கூடாது என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பொதுவிவகாரங்களுக்கான உதவிச்செயலர் டோக் பிரான்ட்ஸ் தெரிவித்துள்ளார்.
உலக ஊடக நாளை முன்னிட்டு, அமெரிக்க நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில், காணாலி மூலம் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஊடகங்கள் செய்கின்ற பணிக்காக ஊடக அமைப்புகளை அமெரிக்கா தண்டிப்பதில்லை.
சிறிலங்கா அரசாங்கமும் அதுபோலவே செயற்பட வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது.
எட்வேட் ஸ்னோடன் வெளியிட்ட உயர் இரகசிய ஆவணங்களை அமெரிக்க ஊடகங்கள் பிரசுரித்த போது. அமெரிக்கா எதையும் செய்யவில்லை.
அவர்களின் பணிக்காக எமது ஊடக நிறுவனங்களை நாம் தண்டிக்கவில்லை.
ஊடக சுதந்திரம் பற்றிய சுட்டியில், 2013இல் 32வது இடத்தில் இருந்த அமெரிக்கா, இந்த ஆண்டில் 46வது இடத்துக்குப் பின் தள்ளப்பட்டுள்ளது.
நாம் எப்போதுமே மிகச் சரியாகச் செயற்பட முடிவதில்லை என்பதை ஏற்றுக் கொள்கிறேன்.
இந்த குறைபாடுகள் இருந்தாலும், ஊடக சுதந்திரத்தின் முக்கியத்துவம் குறித்து ஏனைய நாடுகளுக்கு அமெரிக்கா ஒரு உதாரணமாக இருக்கிறது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
- See more at: http://www.canadamirror.com/canada/25788.html#sthash.BkWShl4Z.dpuf

Geen opmerkingen:

Een reactie posten