தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 10 mei 2014

மாகாணசபையினில் ஒன்றுமில்லை! CVK – மாவை!

800 இராணுவ வெற்றிடங்களுக்கே ஆட்பிடிப்பு!

யாழ்ப்பாணத்தினில் முன்னெடுக்கப்படுவது இலங்கை இராணுவத்திற்கான ஆட்சேர்ப்பேயென இராணுவத்தலைமை ஏற்றுக்கொண்டுள்ளது.அவ்வகையினில் 800 இராணுவ வெற்றிடங்களை நிரப்புவதற்கு யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் இளைஞர் யுவதிகளை இணைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக இராணுவத்தின் ஊடக இணைப்பாளர் மல்லவாராச்சி இன்று யாழ்ப்பாணத்தினில் தெரிவித்துள்ளார்.
யாழ். சிவில் அலுவலகத்தில் இன்று காலை 9.30 மணிக்கு இடம்பெற்ற படைத்தலைமையகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே குறித்த அறிவித்தலை உத்தியோக பூர்வமாக அவர் தெரிவித்தார்.
பயிற்சி முடிவடைந்ததும் இராணுவ தொண்டர்களாக உள்வாங்கப்பட்டு மாதாந்தம் 30 ஆயிரம் ரூபா சம்பளமும் வழங்கப்படும். இதற்கு 18 வயது தொடக்கம் 28 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.எனினும் படை அதிகாரிகளை இணைப்பதற்கு மட்டும் வர்த்தமானியில் அறிவிக்கப்படுமே ஒழிய தொண்டர்களை இணைப்பதற்கு அல்ல. இவ்வாறே தான் தெற்கிலும் தொண்டர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். எனினும் கடந்த காலங்களில் வடக்கில் ஆட்களை இணைப்பதற்கான சூழ்நிலை இருக்கவில்லை. எனவே தற்போது அதற்கான சூழல் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தினில் போலி தரகர்கள் சகிதம் நடப்பது உண்மையான ஆட்சேர்ப்பில்லையென அரச அதிபர் அறிவித்திருந்த நிலையிலேயே அவசர அவசரமாக படைத்தரப்பின் இவ்வறிவிப்பு வெளியாகியுள்ளது.
http://www.jvpnews.com/srilanka/68773.html

ஆந்திரப் பிரதேசத்தில் வைத்து 31 இலங்கை மீனவர்கள் கைது!

அவர்கள் இன்றையதினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். அவர்களின் நான்கு படகுகளும், 4 மெற்றிக் தொன் மீன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
http://www.jvpnews.com/srilanka/68776.html

மாகாணசபையினில் ஒன்றுமில்லை! CVK – மாவை!

இந்தியாவின் வழிநடத்தலில் உருவாக்கப்பட்ட வடமாகாண சபைக்கு அதிகாரங்கள் இல்லை. இந்தியாவில் இருப்பதினைப் போன்று மாநில மத்திய அரசு உருவாக்கப்படவில்லையெனத்தெரிவித்துள்ளார்
 சீ.வி.கே.சிவஞானம். இந்தியாவின் இலங்கை, மாலைதீவிற்கான இணைச் செயலாளர் சுசித்திரா துரை யுடனான சந்திப்பினில் வடமாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இக் கலந்துரையாடல் குறித்து ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் போதே சிவஞானம் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தனிநபர்கள் அமைப்புக்கள் மீதான தடையினை ஆதரிக்கும் நடவடிக்கையினை இந்தியா மேற்கொள்ளவில்லையென்றும் அதற்கான தேவை மத்திய அரசிற்கு இல்லையெனவும் சுசித்திரா கூறியிருந்தார். வடக்கில் இராணுவத்தினர் அதிகம் இருப்பதாகவும், வடக்கிலிருந்து இராணுவத்தினர் வெளியேறினாலேயே இங்குள்ள மற்றும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் அவ்விடங்களில் மீளக்குடியமர முடியும் என மாவை எடுத்துக் கூறியிருந்தார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
cv_sujithira
http://www.jvpnews.com/srilanka/68779.html

Geen opmerkingen:

Een reactie posten