தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 8 mei 2014

வாள்வெட்டு தனஞ்செயனின் காமக்கொடூரம்: இதில் டக்ளசுக்கு வேலைபார்த்திருக்கிறார் !


தன்னை ஒரு வானொலி அறிவிப்பாளராக அறிமுகப்படுத்திக்கொண்டு, மக்கள் மத்தியில் வலம்வந்த நபரே இந்தப் பொன்னம்பலம் தனஞ்செயன் ஆவார். இவர் கொழும்பில் உள்ள பிரபல வானொலி ஒன்றிலும், பின்னர் யாழில் உள்ள வானொலி ஒன்றிலும் அறிவிப்பாளராக இருந்துள்ளார். இந்தவேளையில் தான் இவருக்கு மதுஷாவின் தொடர்பு கிடைத்துள்ளது. இவர்கள் இருவரும் ஏற்கனவே பழகிக்கொண்டவர்கள் என்று தற்போது கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. மதுஷாவை பெண்கேட்டு தனஞ்செயன் அவர்களது விட்டுக்குச் சென்றுள்ளார். உடனே சாஸ்திரிகளை சந்தித்த, அவர்கள் குடும்பம் இரண்டு ஜாதகங்களையும் பார்த்துள்ளார்கள். இதில் அந்த சாஸ்திரி, (அக்கா) மதுஷாவின் ஜாதகம் தஞ்செயனுடன் பொருந்தவில்லை என்றும், ஆனால் மதுஷாவின் தங்கையான தர்மிகாவின் ஜாதம் நன்றாகப் பொருந்துவதாகவும் கூறியுள்ளார் ! (இந்த படுபாவியின் ஜாதக குறிப்பு உண்மை என்றால், இவர்கள் சாகப் போவதையும் அல்லவா சொல்லி இருக்கவேண்டும்). 

இவை எல்லாம் இவ்வாறு இருக்க, தனஞ்செயன் தர்மிகாவை(தங்கை) திருமணம் செய்துவிட்டார். தர்மிகா புலிகள் இயக்க முன் நாள் போராளி ஆவர். அவரை அடிக்கடி துண்புறுத்திய தஞ்செயன், நீ இயக்கத்தில் இருந்த காலத்தில் யாருடனாவது உடலுறவில் ஈடுபட்டாயா என்று கூடக் கேட்டு, கொடுமைப்படுத்தியுள்ளார். இவ்வேளையில் இவர் தங்கையை மணம் முடித்த பின்னர் கூட அக்காவுடன் தொலைபேசியில் உரையாடி வந்தார் என்று தஞ்செயனின் நண்பர்கள் தெரிவித்துள்ளார்கள்(ஊர்ஜிதம் செய்ய முடியவில்லை). இச்சமயத்திலேயே மதுஷா(அக்கா) திருமண ஏற்பாடு நடந்துள்ளது. அவரை மணம் முடிக்க வந்த மாப்பிள்ளையை தொலைபேசியூடாக தொடர்புகொண்ட தஞ்செயன், தானும் மதுஷாவும் உடல்ரீதியாக பல தடவை இணைந்துவிட்டதாகவும், தனக்கு மதுஷாவுக்கும் பிறந்த குழந்தையை நோர்வே நாட்டில் ஒரு தம்பதியினரிடம் இரகசியமாக வளர்க்க கொடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார். இதனால் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இந்தக் கலியாணம் தடைப்பட்டது. 

தர்மிகா தனது கணவர் தஞ்செயனோடு பெரும் பிரச்சனைப்பட்டு, இறுதியாகப் பிரிந்துசென்று தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். இன் நிலையில் அடுத்த கலியானம் ஒன்றை பேசிய மதுஷாவின் பெற்றோர் இம்முறை உஷாராக இருந்துள்ளார்கள். சினிமா, தொலைக்காட்சி நாடகங்களை மிஞ்சும் வகையில் மதுசாவின் திருமணம் நடந்துள்ளது. தனஞ்சயன் தொடா்ந்து திருமணங்களைக் குழப்புவதால் இரகசியமான முறையில் மாப்பிளை மதுஷாவிற்குப் பார்க்கப்பட்டுள்ளது. அரசாங்க உத்தியோகத்தராக இருக்கும் ஒருவரை பார்த்து திருமணம் இரகசியமான முறையில் நடைபெற்றுள்ளது. இதை அறிந்த தனஞ்சயன் பெரும் கோபமுற்றுள்ளார். திருமணமாகி மதுசாவும் மாப்பிளையும் முதன் முதலாக, தனது தாய் வீ்ட்டுக்கு வந்துள்ளனா். அதனை யாரோ ஒரு புல்லுருவி மூலம் தனஞ்சயன் அறிந்துள்ளார். அதன் பின்னா் நேற்று முந்தினம் இரவு அவா்கள் தங்கியிருந்த வீட்டில் தனது சொந்த ஆட்டோவில் வந்து மேற்படிக் கொடும் செயலைச் செய்து முடித்துள்ளார் தனஞ்சயன். தர்மிகா தற்போது தனது அக்கா(மதுஷா) அம்மா மற்றும் சகோதரனை இழந்த நிலையில் உள்ளார். 

"உன்னைப் பார்க்கும்போது எனக்கு உன் அக்கா நினைவு தான் வருகிறது" என்றும், "என்னை உங்கள் குடும்பம் ஏமாற்றிவிட்டது" என்றும் அடிக்கடி தஞ்செயன் கூறிவந்துள்ளார். தன்னை விரும்பாத ஒரு பெண்ணுக்காகவா இவர் இவ்வளவு ஆத்திரம் அடைந்தார் ? 3 கொலைகளை செய்ய துணிந்தார் ? தனது தங்கையை மணம் முடித்துவிட்டார் என்று தெரிந்தும் மதுஷா ஏன் தனஞ்செயனோடு உறவை வளர்த்தார் ? இவை எல்லாம் இன்னும் புரியாத புதிராகவே உள்ளது. ஆனால் ஒன்று மட்டும் நன்றாகப் புரிகிறது. காமம் தலைக்கேறினால் என்ன நடக்கும் என்பது மட்டும் நன்றாகப் புரிகிறது. இதில் இந்த தஞ்செயன் டக்ளஸ் ஒட்டுக்குழுவோடு நல்ல நெருக்கத்தில் இருந்துள்ளார் என்ற செய்திகளும் வெளியாகியுள்ளது. இனிச் சொல்லவா வேண்டும் ?

Geen opmerkingen:

Een reactie posten