தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 8 mei 2014

செய்தி நிறுவனங்களை தண்டிக்கக்கூடாது! அமெரிக்காவை இலங்கை பின்பற்ற வேண்டும் என கோரிக்கை



மே-18 கேளிக்கை நாள் அல்ல! அது துக்க நாள்: ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு தமிழகத்தில் எதிர்ப்பு
[ வியாழக்கிழமை, 08 மே 2014, 02:49.48 PM GMT ]
ஈழத்தமிழினத்தின் மீதான சிங்கள அரசினது உச்சகட்ட இனப்படுகொலை நடந்தேறிய மே18ம் நாளினை ஒர் கேளிக்கை நாளாக கொள்ளாமல் துக்க நாளாக கொண்டு, சென்னையில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டியினை வேறு மாநிலத்துக்கு மாற்றுமாறு தமிழகத்தில் உணர்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் உள்ள காவல்துறை ஆணையரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளதோடு தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கும் , தலைமைச் செயலருக்கும் தமிழ் உணர்வாளர்கள் மனுக் கொடுத்துள்ளனர்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள தமிழக தமிழ் உணர்வாளர்கள்:
அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழர்கள் மே 18ம் நாளில் மாபெரும் நினைவேந்தல் நிகழ்சிகளை நடத்துகின்றனர். தமிழகத்திலும் பல்வேறு பகுதிகளில் சுடரேந்தி தமிழின உணர்வாளர்கள் போரில் கொல்லப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு நினைவஞ்சலி செலுத்துகிறார்கள்.
வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் இந்த நாளில் கேளிக்கை, விளையாட்டுகள், களியாட்டங்கள் முதலியவற்றை தவிர்த்து வருகின்றனர்.
தமிழகத்திலும் இனப்படுகொலை துக்க நாளை தமிழக மக்கள் நினைவு கூர்தல் அவசியமாகும். இந்த மே 18ம் நாள் தமிழர் நெஞ்சங்களில் ஆறாத ரணமாக பதிவாகி உள்ளது என்றால் அது மிகையல்ல.
இந்த நாளில் கிரிக்கெட் போட்டி நடைபெறுவது தமிழர்களின் உணர்வை புண்படுத்துவதாக அமைந்துவிடும். கிரிக்கெட் வாரியம் தமிழர்களின் கோபத்திற்கும் ஆளாகும். அதனால் வருகிற மே 18ல் சென்னையில் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியை நடத்த அனுமதிக்கக் கூடாது.
மேலும், இந்த போட்டியை வேறு எதாவது ஒரு நாளில் ஐ.பி.எல் நிர்வாகம் வைத்துக் கொள்ளட்டும். ஒரு வேளை ஐ.பி.எல் நிர்வாகம் இதே நாளில் கிரிக்கெட் போட்டியை நடத்தினால் தமிழ் அமைப்புகள் மற்றும் தமிழ் மாணவர்கள் இந்த கிரிக்கெட் போட்டிக்கு எதிராக போராட்டம் நடத்துவார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும், தமிழக அரசும் இந்த நாளில் கிரிக்கெட் போட்டியை சென்னையில் நடத்த அனுமதிக்க கூடாது என்றும் உலகத் தமிழர்கள் சார்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு (தமிழகம்)  கேட்டுக் கொள்கிறது என்றார்.
http://www.tamilwin.com/show-RUmsyFTcLYjs6.html
செய்தி நிறுவனங்களை தண்டிக்கக்கூடாது! அமெரிக்காவை இலங்கை பின்பற்ற வேண்டும் என கோரிக்கை
[ வியாழக்கிழமை, 08 மே 2014, 04:12.25 PM GMT ]
அமெரிக்காவில் தமது பணிகளை செய்யும் செய்தி நிறுவனங்கள் தண்டிக்கப்படுவதில்லை. இதனையே இலங்கையும் பின்பற்ற வேண்டும் என்று ஆசைப்படுவதாக அமரிக்கா பொதுநிர்வாகத்துக்கான உதவி செயலாளர் டௌவக் பிரான்ட்ஸ் இன்று தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள அமெரிக்க நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது வீடியோ மாநாட்டு திரையின் மூலம் அவர் பங்கேற்றார்.
இதன்போது எட்வேட் ஸ்னோடென் மிகவும் இரகசியமான கோவைகளை வெளியிட்ட போது அமெரிக்கா அரசாங்கம் எவ்விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டது என்பதை பிரான்ட்ஸ் உதாரணமாக காட்டினார்.
இந்த ஆவணம் வெளியானமைக்காக அமரிக்க அரசாங்கம் எதனையும் செய்யவில்லை. செய்தி நிறுவனம் தமது பணியை செய்ததாக அமெரிக்கா அதனை கருதியது.
அப்படியிருந்தும் அமெரிக்கா உலக ஊடக சுதந்திர தரப்படுத்தலில் 32வது இடத்தில் இருந்து 2013 ம் ஆண்டில் 46வது இடத்துக்கு தள்ளப்பட்டதாக பிரான்ட்ஸ் குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyFTcLYjs7.html

Geen opmerkingen:

Een reactie posten