இன்று தொழிலாளர் தினமாக அனைவராலும் கொண்டாடப்பட்டதுடன் முதலாளித் துவத்தினை ஒழிக்க பலமான குரல்கள் உலகின் பல பாகங்களிலும் இருந்து ஒலித்தது இந்த நாளின் தன்மை இப்படி இருக்க இதனை முற்று முழுதாக மாற்றியமைத்தது இலங்கை அரசாங்கம் தொழிலாளர் நாளில் தொழிலாளர் விடுதலை பற்றி கூறாமல் இன்றைய அரசின் தனவான்களாக தங்களைக் காட்டிக் கொள்ளும் மகிந்த சகோதரர்களை புகழ்பாடும் நாளாக இன்றைய நாள் கொழும்பில் அமைந்திருந்தது.
அதில் பல அமைச்சர்கள், முதலமைச்சர்கள் என பலரும் மௌனமாய் இருந்தமை வேதனை அளிப்பதாக அமைந்ததாகவும் தொழிலாளர் நாள் வரலாற்றில் இன்று கொழம்பில் கரி நாள் என்றும் பல தொழிலாளிகள் முனுமுனுத்ததை அறியக் கூடியதாய் உள்ளது
Geen opmerkingen:
Een reactie posten