தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 1 mei 2014

சம்பந்தனுக்கு ஆப்படித்தார் விக்னேஸ்வரன்: உள்ளே நடந்தது என்ன ?

கடந்த 2 தினங்களுக்கு முன்னர் திருகோணமலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயல்குழு கூட்டம் நடைபெற்றது யாவரும் அறிந்ததே. இதில் கலந்துகொண்ட மாகாணசபை உறுப்பினர் ஆனந்தியைப் பார்த்து சுமந்திரன் எம்.பி பல கேள்விகளை தொடுத்திருந்தார். இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் இடம்பெற்ற சம்பவங்களும் ஏற்கனவே மீடியாக்களில் வெளியாகி இருந்தது. இதேவேளை இந்த சயிக்கிள் காப்பில், இரா சம்பந்தன் அவர்கள் எழுந்து, எமக்கு சர்வதேச அங்கிகாரம் கிடைத்துவிட்டது. தென்னாபிரிக்கா தற்போது சமரசம் பேச வருகிறது. ஐ.நா எமக்காக குரல்கொடுக்கிறது. எனவே தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் தமிழ் மக்களுக்கும் தற்போது ஒரு சர்வதேச அங்கிகாரம் கிடைத்துவிட்டது. ஆனால் எமது கட்சியை தான் சிலர் உடைக்க பார்கிறார்கள். அதனை நாம் அனுமதிக்க கூடாது என்று பேசியிருக்கிறார். 

இதற்கு பதில் கூறுமுகமாகப் பேசிய வடக்கின் முதலமைச்சர் திரு.விக்னேஸ்வரன் அவர்கள், எமக்கு சர்வதேச அங்கிகாரத்தை பெற்றுத்தந்தது 33 வருட போராட்டமே என்று கூறியுள்ளார். பொதுவாக விடுதலைப் புலிகள் என்றாலே சம்பந்தர் ஐயாவுக்கு ஒரு அலேர்ஜி இருப்பது அனைவருக்கும் தெரிந்த விடையம். ஏதோ தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் நர்வு காரணமாகவே , சர்வதேச அங்கிகாரம் கிடைக்கப்பெற்றதாக இவர் கூறுவதை, அப்பட்டமாக மறுத்துள்ளார் முதல்வர் விக்னேஸ்வரன் அவர்கள். இதனை சம்பந்தர் ஐயா சற்றும் எதிர்பார்கவில்லை என்று, இக் கூட்டத்தில் கலந்துகொண்ட, மற்றும் பெயர் குறிப்பிட விரும்பாத எம்.பி ஒருவர் அதிர்வு இணையத்திற்கு இத்தகவலை தெரிவித்துள்ளார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.

தமது இன்னுயிரை கொடுத்து போராடிய போராளிகள். புலம்பெயர்ந்து வாழும் மக்கள், மற்றும் அவர்களால் நடாத்தப்படும் அமைப்புகளே தமிழர்களுக்கு ஒரு சர்வதேச அங்கிகாரத்தைப் தற்போது பெற்றுக்கொடுத்துள்ளது. இது ஜதார்தமும் ஆகும்.

http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6768

Geen opmerkingen:

Een reactie posten