தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 9 mei 2014

கூட்டமைப்பினரை கைது செய்யவும்: மொஹமட் முஸ்ஸமில் !

தடை செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் சார்பில் நினைவுகூரல் வைபவங்களை ஏற்பாடு செய்வது, நாட்டின் சட்டத்தை கடுமையாக மீறும் செயல் என்பதனால், நினைவுகூரல் வைபவத்தை ஏற்பாடு செய்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை கைது செய்யுமாறு தேசிய சுதந்திர முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸ்ஸமில் அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

விடுதலைப் புலிகளை நினைவுகூரும் வைபவம் ஒன்றை எதிர்வரும் 18ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

தடைசெய்யப்பட்டுள்ள இயக்கம் ஒன்றை நினைவுகூரும் வகையில் வைபவங்களை ஏற்பாடு செய்வது அந்த இயக்கத்திற்கு மீண்டும் உயிரூட்டும் நடவடிக்கையாகும்.

நாட்டின் சட்டத்தை கவனத்தில் கொள்ளாது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்டு வரும் இப்படியான நடவடிக்கைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் கூட்டமைப்பினரை கைது செய்யுமாறும் அவ்வறிக்கையில் கோரப்பட்டுள்ளது.
09 May 2014
http://www.lankaroad.net/index.php?subaction=showfull&id=1399618335&archive=&start_from=&ucat=1&

Geen opmerkingen:

Een reactie posten