பொலிஸார் அல்லது இராணுவத்தினரின் பாதுகாப்பு இன்றி ரயில் போக்குவரத்தை மேற்கொள்ள முடியாது என ரயில் ஓட்டுனர்கள் தெரிவித்துள்ளனர்.
ரயில் ஓட்டுனர்கள் மீது இடம்பெறும் தாக்குதல் சம்பவத்தினையடுத்து இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக, லொகோமோடிவ் ஒபரேஷன் இன்ஜினியர் சங்கத்தின் (Locomotive Operating Engineers Association) பொருளாளர் குறிப்பிட்டுள்ளார்.
மஹவவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலின் ஓட்டுனர் ஒருவர் பயணிகளால் இன்று தாக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை பொல்கஹவெல ரயில் நிலையத்திற்கு அருகில் வைத்து இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. |
Geen opmerkingen:
Een reactie posten