தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 9 mei 2014

இலங்கைக்கு எதிரான விசாரணைக்கு 15 இலட்சம் டொலர்கள் தேவை!


இலங்­கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்­வ­தேச விசா­ர­ணை­யொன்றை முன்­னெ­டுக்க 15 இலட்சம் டொலர்கள் தேவைப்­ப­டு­வ­தாக ஐக்­கிய நாடுகள் சபை அறி­வித்­துள்­ளது. விடு­தலைப் புலி­க­ளுக்கும்,

இலங்கை இரா­ணு­வத்­தி­ன­ருக்கும் இடையில்
நடை­பெற்ற இறு­திக்­கட்டப் போரில் இடம்­பெற்ற மனித உரிமை
மீறல்கள் தொடர்­பான சர்­வ­தேச விசா­ர­ணை­யொன்றை முன்­னெ­டுக்­கவே இந்தத் தொகை தேவைப்­ப­டு­வ­தாக ஐக்­கிய நாடுகள் சபையின் மனித உரி­மைகள் அமைப்பு கணக்­கிட்­டுள்­ளது.

இலங்கை நாண­யத்தின் பெறு­ம­தியில் சுமார் இரு­நூறு மில்­லியன் ரூபா பெறு­ம­தி­யான இந்தத் தொகையை திரட்டிக் கொள்­வது மற்றும் இலங்­கைக்கு எதி­ரான சர்­வ­தேச விசா­ர­ணையை எவ்­வாறு முன்­கொண்டு செல்­வது என்­பன தொடர்பில் ஐக்­கிய நாடுகள் சபையின் தலை­மை­ய­கத்தில் அண்­மையில் கலந்­து­ரை­யாடல் ஒன்றும் நடை­பெற்­றுள்­ளது.

இதற்­கி­டையே இலங்­கைக்கு எதி­ரான இந்த சர்­வ­தேச விசா­ர­ணைக்குத் தேவை­யான பணத்தில் ஒரு­ப­கு­தியை கனடா, இங்­கி­லாந்து மற்றும் அமெ­ரிக்கா ஆகிய நாடுகள் வழங்க இணக்கம் தெரி­வித்­துள்­ளன. மேலும் தேவைப்­படும் எஞ்­சிய பணத்தைத் திரட்டித் தரவும் அந்­நா­டுகள் முன்­வந்­துள்­ளன.

இத­னை­ய­டுத்து இலங்­கைக்கு எதி­ரான சர்­வ­தேச விசா­ரணைக் குழு­வொன்றை அமைப்­பது மற்றும் அதன் பொறுப்­புகள் தொடர்பில் இம்­மாத இறு­திக்குள் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை அமைப்பு அறி­வித்தல் ஒன்றை விடுக்­க­வுள்­ளது.

இதேவேளை இலங்கை போர்க் குற்றச் செயல்கள் தொடாபில் விசா­ரணை நடாத்த நோர்வே நிதி உத­வி­களை வழங்­கி­யுள்­ளது. ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் ஆணை­யாளர் நவ­னீ­தம்­பிள்­ளைக்கு இவ்­வாறு நிதி உதவி வழங்­கப்­பட்­டுள்­ளது.
இலங்கைப் போர்க் குற்றச் செயல்கள் மற்றும் ஏனைய உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை விசா­ரணை நடாத்த உள்­ளது. இந்த விசா­ர­ணை­க­ளுக்­காக சுமார் 5000 மில்­லியன் ரூபா­வினை நோர்வே அர­சாங்கம், நவ­னீ­தம்­பிள்­ளைக்கு வழங்­கி­யுள்­ளது.

நிதி வழங்­கு­வது குறித்து நவ­னீ­தம்­பிள்­ளை­யுடன் ஏற்­க­னவே ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­பட்­டுள்­ளது.

இலங்­கைக்கு எதி­ராக அமெ­ரிக்கா உள்­ளிட்ட நாடு­களின் தீர்­மா­னத்­திற்கு நோர்வே ஆத­ர­வ­ளித்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.
தீர்­மா­னத்­திற்கு ஆத­ர­வான நாடுகள் மட்டுமே விசாரணைக்காக பணம் வழங்கியுள்ளதாக ஜெனீவாவிற்கான பாகிஸ்தான் பிரதிநிதி குற்றம் சுமத்தியுள்ளார்.
08 May 2014
http://www.lankaroad.net/index.php?subaction=showfull&id=1399541927&archive=&start_from=&ucat=1&

Geen opmerkingen:

Een reactie posten